அக்டோபர் 2011 முக்கிய நிகழ்வுகள்

* கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 56-வது வயதில் புற்றுநோய்க்குப் பலியானார். (அக்டோபர் 6)

* மாணவர்களுக்கான ரூ. 2,276 விலையுள்ள மலிவுவிலை கம்ப்ட்டரை டெல்லியில் மத்திய மனிதவளத் துறை மந்திரி கபில்சிபல் அறிமுகப்படுத்தினார். (அக்டோபர் 6)

நோபல் பரிசு 2011 : வேதியியல்


 2011-க்கான வேதியியல் நோபல் பரிசு இஸ்ரேல் நாட்டுப் பேராசிரியர் டேனியல் ஷெக்ட்மான் (Daniel Shechtman) என்பவருக்கு, குவாஸி-க்ரிஸ்டல்ஸ் அல்லது குவாஸி-பீரியாடிக் க்ரிஸ்டல்ஸ் (பகுதி வெளிச்சீர் படிகம்) என்ற விந்தைப் பொருளைக் கண்டுபிடித்ததற்காக்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பொருளையும் அதன் கண்டுபிடிப்பின் தாக்கத்தையும் புரிந்துகொள்ள சாதாப் படிகங்களை அறிமுகப்படுத்திக்கொள்வோம்.

நோபல் பரிசுகள் 2011

மருத்துவம்: 
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பிïட்லர், லக்சம்பர்க்கை சேர்ந்த ஜுல்ஸ் ஹாப்மன், கனடாவைச் சேர்ந்த ரால்ப் ஸ்டீன்மனுக்கு கிடைத்துள்ளது. இவர்களில், ரால்ப் ஸ்டீன்மன் ஏற்கனவே இறந்துவிட்டார்.