TNPSC | TET Tamil Study material pdf | mp3 study material for tnpsc & tet


10ஆம் வகுப்பு சமச்சீர்க்கல்வி - தமிழ் | பாடம்-1 (வாழ்த்து)
முக்கிய வினா விடைகள்
  • மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
    திருவாதவூர்
  • மாணிக்கவாசகர் யாரிடம் பணிபுரிந்தார்?
    அரிமர்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்
  • மாணிக்கவாசகர் எங்கு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்?
    பாண்டியனுக்காக குதிரை வாங்க சென்றபோது திருப்பெருந்துறையில்
  • அழுது அடையடைந்த அன்பர் யார்?
    மாணிக்கவாசகர்
  • மாணிக்கவாசகர் அருளியவை யாவை?
    திருவாசகமும். திருக்கோவையாரும்
    mp3 Audio download
  • மாணிக்கவாசகர் எழுப்பிய கோவில்  எங்கு உள்ளது?
    புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருப்பெருந்துறையில்
    (தற்பொழுது ஆவுடையார்கோவில் என வழங்கப்படுகிறது)
  • மாணிக்கவாசகரின் காலம் யாது?
    கி.பி. 9ம் நூற்றாண்டு 
  • திருவாசகத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை?
    658
  • திருவாசகமும் திருக்கோவையாரும் சைவத்திருமுறையில் எந்த திருமுறையில் இடம் பெற்றுள்ளது?
    எட்டாம் திருமுறையில்
  • திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்தவர் யார்?
    ஜி.யு.போப்
  • சதகம் என்பது என்ன?
    100 பாடல்களை கொண்ட நூல்