TNPSC VAO Exam study materials - கிராம நிர்வாக நடைமுறைகள் - சாதிச் சான்று
- நிரந்தர சாதிச் சான்று அட்டையில் வழங்குவதை அரசு 1988 முதல் செயல்படுத்தி வருகிறது
- சாதிச் சான்று வழங்கக்கோரும் விண்ணப்ப மனுவில் நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டியதில்லை
- பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினருக்கு சாதிச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்கள் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் / துணைவட்டாசியர்கள் (சான்றுகள்)
- ஆதி திராவிடர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதிச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர் - வட்டாட்சியர்
- பழங்குடியினர் வகுப்பினருக்கு சாதிச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர் - வருவாய் கோட்ட அலுவலர் / சார் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்
- சென்னை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்.
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதிச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர் - வட்டாட்சியர்
- இந்து. சீக்கியர். புத்த மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்
- ஆதரவற்ற ஆனாதைக் குழந்தைகள். பெற்றோர்கள் யாரென்று தெரியாத நிலையிலும். ஒருவரும் முன்வந்து பெற்றோர் யாரென்று தகவல் ஏதும் தராத நிலையிலும் அந்த ஆதரவற்ற ஆனாதைக்குழந்தைக்கு பிற்படுத்தப்டோர் வகுப்புச்சான்று வழங்கி பிற்படுத்தப்டோருக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளும் வழங்க வேண்டும்
- பழங்குடியினர் ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அல்லது சார்ந்திருந்தாலும் அவர் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவராகவே கருதப்பட வேண்டும்
- 11-11-1989க்கு முன்பு பழங்குடியினர் சான்று வட்டாட்சியரால் வழங்கப்பட்டது.
- பழங்குடியினர் கலப்பு திருமணந்தால் பிறந்த குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க கலப்புத் திருமண தம்பதியரை பழங்குடி சமுதாயம் ஏற்றுக் கொண்டதா என்பதை பொருத்தே அமையும்.
- மதம் மாறிய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மதம் மாறுவதற்கு முன் பெற்றோர் எந்த வகுப்பைச் சார்ந்தவர்களாக இருந்தார்களோ அந்த வகுப்புக்கான சான்றிதழ் வழங்க உரிய விசாரணை செய்து பரிந்துரைக்க வேண்டும்.
No comments:
Post a Comment