9th Samacheer Kalvi Tamil Text Book Study material for
TNPSC, TET, TRB Exams
- துளசிச்செடியின் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் மார்புச்சளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும். இதன் இலைகளை எலுமிச்சம்பழச் சாற்றுடன் அரைத்துப்போடப் படை நீங்கும்; விதைகளைப் பொடி செய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு உண்டால் உடற்சூடு, நீரெரிச்சல் ஆகியன அடங்கும்.
- கீழாநெல்லியை கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி எனவும் குறிப்பிடுவர். இது மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வருகிறது.
- காய்களுடன் கூடிய முழுக் கீழாநெல்லிச்செடியைத் தூயநீரில் கழுவி அரைத்து விழுதாக்கிக் கொள்ளல் வேண்டும். ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை இருநூறு மில்லி லிட்டர் எருமைத்தயிருடன் கலந்து, காலை ஆறு மணியளவில் வெறும்வயிற்றில் உட்கொள்ளல் வேண்டும். இவ்வாறு மூன்று நாள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் தீரும்.