அரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. திருத்த முறைக்கு உட்படாத சில திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம்.
திருத்தம் செய்யப்படுகிற அரசியல் சட்டத்துக்கேற்ப அரசியல் சட்டத்தை திருத்த மூன்று வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல் 2. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல் 3. பாராளுமன்றத்தின் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன், மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்று திருத்தப்படுதல்
கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இலக்கியங்களும் பழங்கால வரலாற்றை அறிய உதவும் காலக்கண்ணாடிகள்.
வரலாற்று ஆவணம்:
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றுகிறது.
இளமைக்காலம்:
ஆனந்தரங்கர் சென்னை பிரம்பூரில் (பெரம்பூர்) 1709ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் நாள் பிறந்தவர்.
இவரின் தந்தை = திருவேங்கடம்
“எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார்.
உவமை என்பது,
ஒரு பொருளை அல்லது நிகழ்வை மற்றொரு பொருளோடு அல்லது நிகழ்வோடு ஒப்புமைப்படுத்துவது.
உவமை, உவமிக்கும் பொருளைவிட உயர்ந்தது.
உவமைத்தொடரில் உவமை முன்னும், பொருள் பின்னுமாக வரும்.
(எ.கா.) மதி போன்ற முகம்: மதி – உவமை; முகம் - உவமேயம்
இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் - பகுதி 2
முகவுரை
முகவுரை அரசமைப்பின் அடிப்படை தன்மை மற்றும் நோக்கங்களைச் சுருக்கமாகக் காட்டுகிறது.
அரசமைப்பின் முகவுரை 1946 டிசம்பர் 13-ல் ஜவஹர்லால் நேருவால் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு அரசியல மைப்பு நிர்ணய சபையால் 1947 ஜனவரி 22-ல் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
இந்திய அரசமைப்பு 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனினும் முகவுரை அப்பகுதிகளுக்குள் இடம்பெறவில்லை.
இந்திய அரசமைப்பின் முகவுரை அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்டது.
முகவுரை 1976-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை திருத்தப்பட்டது. 42 வது அரசமைப்புதிருத்தத்தின் படி சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஐக்கிய போன்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது.
TNPSC, TET, TRB போன்ற போட்டித்தேர்வுகளில் 3-4 வருடங்கள் படித்தாலும் தேர்வு ஆகாமால் இருப்பது ஏன்?
ஒரு ஆசிரியரின் பார்வையில் மாணவர்களின் மாபெரும் தவறுகள் :
பயிற்சி மையங்களில் ஏன் தேர்ச்சி விகிதம் 10% குறைவாக இருக்கிறது? ஒருவருக்கே ஏன் பல வேலை கிடைக்கிறது ஆனால பல வருடம் படிக்கும் ஒரு மாணவன் ஏன் ஒரு தேர்வில் கூட வெற்றி பெறுவதில்லை ?
நான் விரைவில் வெற்றி பெற்று விட்டேன் என் நண்பர்கள் ஏன் அதே புத்தகத்தை
படித்தும் வெற்றி பெற மூடியவில்லை போன்ற கேள்விகள் என்னிடம் எப்பொழுதும்
எழுவதுண்டு.
வேலைக்கு சென்று 10 வருடம் ஆகிவிட்டது சமூகத்திற்கு
ஏதாவது செய்வோம் என பீகாரின் ஆனந்து அவர்களின் சூப்பர் 30 போன்று 2
பேருடன் ஆரம்பித்த எனது அமைப்பில், நான் இரண்டு வருடம் தீவிர பயிற்சி
அளித்தும் (லாப நோக்கமின்றி) 30 மாணவர்களில் 17 பேர் மட்டும் தேர்வில்
வெற்றி பெற்றுள்ளனர் மற்றவர்கள் ஏன் தோல்வி அடைந்தனர்? என் மாணவர்கள் செய்த
தவறுகள் என்ன? 4 வருடங்கள் நான் பயிற்சி கொடுத்த சில பயிற்சி மையங்களில்
கிடைத்த அனுபவம் போன்றவற்றை துணை கொண்டு நான் ஆராய்ச்சி செய்த பொழுது
கிடைத்த முடிவுகளே என்னை இந்த கட்டுரையை எழுத துண்டியது.
இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் - பகுதி 1
இந்தியா இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்ம (Socialist), சமயச்சார்பற்ற (Secular), மக்களாட்சிக் (Democratic) குடியரசு (Republic).
இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் தலையிடாவண்ணம் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.
ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் சமவாய்ப்பு பெறுவதே சமதர்மம்.