# இந்திய அரசியலமைப்பு பகுதி-9 | குடியரசுத் தலைவர் | மத்திய அமைச்சரவை

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரின் சின்னம்

இந்திய குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் தலைவராகவும், இந்திய பாதுகாப்பு படையின் உச்சநிலை கமாண்டராகவும் திகழ்கிறார்.

குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரை பிரதமராக நியமிக்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிக்கிறார்.

மத்திய அரசு நிர்வாகம் குடியரசுத் தலைவர் பெயரிலேயே நடைபெறுகிறது.
இந்திய தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
இந்திய குடியரசுத் தலைவர் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.


பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைச் சார்ந்த நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒற்றை மாற்று வாக்கு முறையில் அமைந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது.
பிரதமர்

பாராளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாகத்துறைத் தலைவர்

லோக்சபாவில் பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியால் தேர்ந்தேடுக்கப்படுபவரை குடியரசுத்தலைவர் பிரதமராக நியமிக்கிறார்.

பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபோது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும்.
 
தொடர்ந்து படிக்க



Part | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |

No comments:

Post a Comment