2015ஆம் ஆண்டின் ஞானபீட விருது

2015ஆம் ஆண்டின் ஞானபீட விருது குஜராத் எழுத்தாளர் ரகுவீர் சௌத்ரிக்கு வழங்கப்படுகிறது.
51-வது ஞானபீட விருதுக்கான எழுத்தாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட எழுத்தாளர் நம்வார் சிங் தலைமையிலான தேர்வுக் குழு, ரகுவீர் சௌத்ரியை நேற்று தேர்ந்தெடுத்தது.

கடந்த 1961 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஞானபீட விருது, இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளிலும் உள்ள சிறந்த எழுத்தாளர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சௌத்ரி, குஜராத் இலக்கிய வட்டத்தில் பிரபலமானவர். 80க்கும் அதிகமான புத்தங்களை எழுதியுள்ள அவர் முதலில் நாவல்கள் மற்றும் கவிதைகள் எழுதினார். பின்னர் அவர் நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் சிறு கதைகளையும் எழுதியுள்ளார்.

மனித வாழ்வின் அடிப்படை தத்துவங்கள் குறித்த அவரது நாவல்கள் அம்ரீதா, வேணு வட்ஸ்லா, உபர்வாஸ் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

77 வயதாகும் சௌத்ரி, கடந்த 1977 ஆம் ஆண்டு தனது உபர்வாஸ் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

ஞானபீட விருது பெறும் சௌத்ரிக்கு ரொக்க பரிசுடன், சான்றிதழ் மற்றும் வெண்கலத்தால் ஆன சரஸ்வதி சிலையும் பரிசளிக்கப்படும்.

2014-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது பெற்றவர்

1 comment: