# REAL INSPIRATION & REAL ROLE MODEL. Mr. NANDHAKUMAR, IRS

REAL INSPIRATION & REAL ROLE MODEL. Mr. NANDHAKUMAR, IRS
சரியாக எழுத வராது என்று பள்ளியால் நிராகரிக்கப்பட்ட நந்தகுமார் எழுதி கொடுத்ததைத்தான் பிரதமரும், ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் பேசினார்கள்.
நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் பிரதிநிதி நந்தகுமார் ஐஆர்எஸ்
-எல்.முருகராஜ்

 டிஸ்லெக்ஸியா
இது குழந்தைப்பருவத்தினருக்கு ஏற்படக்கூடிய குறைபாடுபள்ளிக்கூடம் போகும்போதுதான் இதன் பிரச்னை தெரியவரும்.
'இந்தக் குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களை வாசிக்கவும், அவற்றிற்குரிய உச்சரிப்புகளை சம்பந்தப்படுத்திப் பார்க்கவும் சிரமப்படுவார்கள்.ஆனால் இது ஒரு மனநோய் இல்லை.

தமது சக வகுப்பு மாணவர்களைப் போல, எழுத, படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.இதனால் மக்கு பையன் என்றும் சோம்பேறி என்றும் நிராகரிக்கப்படுவர்.
எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றை படிப்பதிலும் பகுத்துப் பார்ப்பதிலும் பல குழப்பங்கள் இருக்கும். முழுமையான வாக்கியங்கள் அமைத்து பேச மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்களின் குறைகளை சரியாகக் கண்டறிந்து, சரியான முறையில் கற்றுவித்தால் சமுதாயத்தில் சிறப்பானதொரு இடத்தைப் பிடிப்பார்கள்.

ஆனால், இவர்களை கண்டறிந்து சரியான முறையில் கற்றுத்தர யாருக்கும் பொறுமையும் இல்லை நேரமும் இல்லை.
ஆனாலும் தன்னைத் தானே தீட்டிக்கொண்டு தனக்குள்ளான சக்தியை மீட்டுக்கொண்டு தனக்கான டிஸ்லெக்ஸியா குறைபாடை வென்று இன்று திருச்சி வருமானவரித் துறையின் இணை ஆணையராக இருப்பவர்தான் நந்தகுமார் ஐஆர்எஸ்.

ஒலைக்குடிசையில் வாழ்ந்த ஏழைக்குடும்பம் அவருடையது.  அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள்ளாகவே அவர் பலமுறை மனதால் காயப்படுத்தப்பட்டார். மக்கு பையன் என்றும் சோம்பேறி என்றும் கடைசி பெஞ்சிற்கு தள்ளப்பட்டார் அதைக்கூட தாங்கிக்கொள்ள முடிந்த இவரால் தாங்கிக்கொள்ள முடியாதது 'இவனோடு சேர்ந்தால் உருப்படமாட்டீங்க' என்று சொல்லி சகமாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தியதான்.
இந்தக் கொடுமையை தாங்கிக்கொண்டு ஆறாம் வகுப்பிற்கு போகவும் இல்லை, பள்ளியில் அழைக்கவும் இல்லை.
 
அதன்பிறகு லாட்டரி சீட்டு விற்கும் பையனாக, ஜெராக்ஸ் கடை பையனாக, மோட்டார் பைக் கடையில் டீ வாங்கித்தரும் பையனாக என்று சமூகத்தின் அடித்தளத்தில் உழல்பவனாக அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு உழைப்பவனாக வளர்ந்தார்.
மூன்று வருடம் கழித்து, எனக்கு ஏன் இந்த நிலை? எனக்குள் என்ன பிரச்னை? இதை போக்கமுடியாதா? என்று யோசித்தபோது எந்த கல்வி தன்னை நிராகரித்ததோ அந்த கல்வியாலேயே சாதித்து காட்டுவது என்று முடிவு செய்தார்.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதினார், தேர்வானார். நம்பிக்கையுடன் அடுத்து பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார் அதிலும் தேறினார். பிளஸ் ஒன் படிக்க பள்ளிக்கு சென்றார். பள்ளி மறுபடியும் நந்தகுமாரை பழைய டிஸ்லெக்ஸியா குறைபாடுடையவராகத்தான் பார்த்து அனுமதிக்க மறுத்தது, மீண்டும் தனித்தேர்வு எழுதினார், தேர்ச்சி பெற்றார்.
 
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்காக யாரிடமும் போய் படிக்கவில்லை சந்தேகம் கூட கேட்டதில்லை.சம்பந்தபட்ட பாடபுத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு அதையே திரும்ப திரும்ப படித்தார் படித்ததை திரும்ப திரும்ப எழுதி பார்த்தார், அது மட்டுமே அவர் செய்தது.
பிறகு கல்லுாரியில் இடம் தேடியபோது தனித்தேர்வு எழுதி தேர்வானவர்களை ஒரு புழு போல பார்த்து துரத்தியது. கடைசியில் ஒரு கல்லுாரியில் இளங்கலை ஆங்கிலம் பிரிவு கிடைத்து படித்தார்.
read more...

No comments:

Post a Comment