# அவமானமே வெற்றிக்கு உரம்!

நாளைய சாதனையர்களுக்குச் சமர்ப்பணம்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று அவரது சுய சரிதையைக் கூறும் படமான "எம்.எஸ். தோனி-தி-அன் டோல்டு ஸ்டோரி" என்ற திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 


இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்தது. 

அதில் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நினைவு கூர்ந்த தோனி முக்கியமாகக் கூறியது 2007 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்வி பற்றித்தான்.

அவர் கூறியதைக் கேளுங்கள்:

2007 ம் ஆண்டு மேற்கு இந்திய தீவில் நடைபெற்ற உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியான தோல்வியின் காரணமாக முதல் சுற்றுடன் போட்டியில் இருந்து வெளியேறியது. எனக்கு அதுதான் முதல் உலக கோப்பைத் தொடர். அந்த மிகப் பெரிய தோல்விக்குப் பின் டெல்லியில் வந்து இறங்கியபோது ஏகப்பட்ட ஊடகங்கள் குவிந்து இருந்தன. அன்று நாங்கள் விமான நிலையத்தில் இறங்கி போலீஸ் வேனில் ஏறினோம். என் அருகே சேவாக் அமர்ந்து இருந்தார். அந்த மாலைப் பொழுதில் எங்களை ஏற்றிச் சென்ற வேன் 60-70 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.

மேலும் படிக்க...

No comments:

Post a Comment