இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2016

அமெரிக்க கவிதை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பாடகர் பாப் டிலனுக்கு 2016ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் 1941ஆம் ஆண்டு பிறந்த பாப் டிலன், பாடகர், ஓவியர், நாட்டுப்புற இசைக்கலைஞர் என பன்முகம் கொண்டவர்.

நாட்டுப்புறக் கலைஞராகத் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய இவர் நிறவெறிக்கு எதிராக இசை மூலமான போராட்டத்தை முன்னெடுத்தவர்.

பாப் டிலன் தனது இசைப் பயணத்தின் தொடக்க காலத்தில் பாடிய ’ப்ளோயிங் இன் தி விண்ட்’ மற்றும் ’தி டைம்ஸ் தே ஆர் எ-சேஞ்சிங்’ போன்ற பாடல்கள் மனித உரிமை ஆர்வலர்கள், போருக்கு எதிராகப் போராடி வருபவர்களுக்கு தேசிய கீதமாக இன்றளவும் விளங்குகிறது.

தத்துவம், அரசியல், சமூகம் சார்ந்த பாடல்களை எழுதியுள்ள பாப் டிலன், ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட உயரிய விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment