# இந்து மத இணைப்பு விளக்கம்

1. சிற்றின்பம் என்பது எது?
உலகபொருள்கள் வழியாக மக்கள் அனுபவிக்கும் இன்பம் சிற்றின்பம் எனப்படும்.

2. பேரின்பம் என்பது என்ன?
என்றும் நிலைபெற்று நின்று இடையறாது அனுபவிக்கதக்க இன்பம் பேரின்பமாகும்.

3. மதம் என்றால் என்ன?
பேரின்பத்தை மக்கள் அனுபவிக்கப் பெரியோர்கள் இறைவன் அருளோடு வகுத்த வழியே மதமாகும்.

4. வழிபட்டு வரும் கடவுள் பெயரால் அமைந்துள்ள மதங்கள் எவை?
சைவம் , வைணவம்

# கணக்கும் கசப்பும்:

இன்று TNPSC தேர்விற்கு தங்களை தயார் செய்து கொண்டு இருக்கும் பெரும்பாலான சகோதர-சகோதரிகளின் பிரச்சினை கணக்கு பாடமே. நன்றாக படிப்பார்கள், நல்ல ஞாபக சக்தி இருக்கும், ஆனால் கணக்கு என்றால் பின் வாங்குவார்கள். அவர்கள் கணக்கில் இருந்து கேட்கப்படும் அந்த 25 கேள்விகளை மிகப் பெரிய தலைவலியாக உணர்வார்கள்.

போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்க வேண்டுமெனில் இந்த 25 கேள்விகளில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க வேண்டும். அதற்கு குறைந்தால் உங்கள் வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கும்.

25 க்கு 24 எடுத்தால் உத்தமம்
25 க்கு 20 எடுத்தால் மத்திமம்
25 க்கு 15 எடுத்தால் மோசம்
25 க்கு 10 எடுத்தால் நாசம்

# யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்...

சென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார். இவருக்கு, 2010-ம் வருட பேட்ச்சில், ஒடிசா மாநிலப் பிரிவில் ரூர்கேலாவின் பயிற்சி ஏ.எஸ்.பி., மல்காங்கிரியில் சப்டிவிஷன் ஆபிஸர் மற்றும் ஏ.எஸ்.பியாக இருந்து தற்போது ராயகடா மாவட்ட எஸ்.எஸ்.பியாகப் பணியாற்றுகிறார்.

ஓட்டுநராக கல்லூரியில்…
விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் பிறந்து தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் சிவசுப்ரமணி. மேற்படிப்பு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பிரிவில் பயின்றார். ஆரம்பத்தில் குறுகிய காலத்துக்கு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் லாரி மற்றும் பேருந்து பணிமனை தொடங்கினார். அப்போது சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 30 பேருந்துகளைப் பராமரிக்கும் பணி கிடைத்தது. அப்படியே பேருந்தின் ஓட்டுநராகவும் வேலை செய்தார். அப்போது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ரமேஷ், யூ.பி.எஸ்.சி.-ல் சென்ட்ரல் செக்ரடரியட் சர்வீஸ் பெற்ற செய்தி, ‘யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்த விவசாயி மகன்’ என்ற தலைப்பில் 1999-ல் வெளியானது. இதைப்படித்த சிவசுப்ரமணிக்கு தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என முதன்முறையாகத் தோன்றியது. 

கல்லூரிப் பேருந்தை ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் கல்லூரி நூலகத்தில் அனுமதி வெற்று யூ.பி.எஸ்.சி. சம்பந்தமான புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தார். ஆனால் பட்டப் படிப்பு இல்லாமல் யூ.பி.எஸ்.சி. எழுத முடியாது என்பதால் சொந்த கிராமத்துக்கே திரும்பினார். விவசாயம் செய்தபடியே பிளஸ் டூ மற்றும் பி.ஏ. வரலாறு ஆகியவற்றை அஞ்சலில் படித்துத் தேர்ச்சிபெற்றார். அதை அடுத்து, அரசு பணி மற்றும் வங்கிகளுக்கான தகுதித்தேர்வுகளையும் எழுதினார். இவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பான பயிற்சி கிடைத்தது. ஆறு முறை யூ.பி.எஸ்.சி. முயன்றவருக்கு இறுதியில் ஐ.பி.எஸ். கிடைத்தது. 
read more 



www.tnpsctamil.info E-mail subscription

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்


# புயல் எச்சரிக்கை கூண்டு குறித்த விவரம்

VAO தேர்வுக்கு மிகுந்த பயனளிக்க கூடிய " புயல் எச்சரிக்கை சின்னங்கள் " பற்றிய விரிவான விளக்க குறிப்புகள்:

புயல் எச்சரிக்கைக் குறித்து அந்தந்த துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். இதன்படி,

புயல் எச்சரிக்கை கூண்டுகள் எண் – 1 மற்றும் 2 :

புயல் தொலைதூரத்தில் இருப்பதை குறிக்கும்.

கூண்டு எண் -3 :
துறைமுகங்களில் வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசுவதை குறிக்கும்.

கூண்டு எண் – 4 :
கடலில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும்.