நேர்மையான அரசியல் தலைவர், முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய் (Morarji
Desai) பிறந்த தினம் பிப்ரவரி 29. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்
பத்து:
* பம்பாய் மாகாணத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில்
(தற்போது குஜராத்தில் உள்ளது) 1896-ல் பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர்.
கடின உழைப்பையும், நேர்மை தவறாத கண்ணியத்தையும் அவரிடம் கற்றார்.
* சிவில் சர்வீசஸ் தேர்வில் 1918-ல் வெற்றி பெற்று துணை ஆட்சியராக 12
ஆண்டுகள் பணிபுரிந்தார். 1930-ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ்
கட்சியின் உறுப்பினரானார். விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார்.
* மாகாண தேர்தல்களில் 2 முறை வெற்றி பெற்று, வருவாய், உள்துறைகளின்
அமைச்சராகப் பணியாற்றினார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில்
கலந்துகொண்டு சிறை சென்றார். பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.