* TNPSC Group 4 தேர்வில் எங்கு தவறினோம் ? ஓர் உள்முக பார்வை

1. கடந்த வருடம் குருப் நான்கு தேர்வு போன்றே பள்ளி புத்தக தரத்தில்தான் வரும்னு நினைச்சி ஸ்கூல் புத்தகத்தலயே தயாரிப்பை சுருக்கி கொண்டது...

 2. போன தடவ நா 178 வரைக்கும் வந்தேன்..இந்த தடவ எனக்கு நல்லா சான்ஸ் இருக்குனு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டு நேத்து ஒரே அடில ஐயோ சாமி இது வேற ஆள் போலயே ன்னு திரும்ப வந்தது.. போன வருஷம் அடிச்சது சின்ன குழந்தை..இந்த வருஷம் அடிச்சது மைக் டைசன்

3. எல்லா தேர்வுகளிலும் பண்ண அதே சில்லி mistakes இந்த தடவையும் பண்ணது...

# பெண்கள் உரிமைகள்

எட்டாம் வகுப்பு - குடிமையியல்

இந்து விதவை மறுமணச் சட்டம் – 1856

பெண்களின் திருமண வயது 21ஆக நிர்ணயம் – 1955

இந்து வாரிசுச் சட்டத்தின்படி தாய் தந்தையரின் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை – 1956

வரதட்சணை தடைச் சட்டம் – 1961

தமிழ்நாடு அரசு சுயமரியாதை திருமணங்கள் சட்டம் – 1967

தமிழ்நாடு –பெண்களை இழிவுபடுத்தும் சுவரொட்டிகள் வெளியிடுவதை தடை செய்ய சட்டம் – 1999

# திருவருட் பிரகாச வள்ளலார்

* பத்தாம் வகுப்பு - தமிழ் - உரைநடைப்பகுதி
 திருவருட் பிரகாச வள்ளலார்
1) இலிங்கிச் செட்டி தெரு அமைந்துள்ள ஊர்?
சென்னை
=========================
2) சென்னை இலிங்கிச் செட்டித் தெருவில் “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” – என்னும் பாடலை பாடி அதற்கு நெடுநேரம் பொருள் கூறிய ஒன்பது வயது சிறுவன்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்
=========================
3) சாதிகளிலும் மதங்களிலும் சமயச் சடங்குகளிலும் உழன்று கொண்டிருந்த மக்களை அவற்றிலிருந்து மீண்டுவர வள்ளலார் அமைத்த பாதை?
சமசர சுத்த சன்மார்க்கப்பாதை
=========================
4) எந்த நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என அறிஞர் போற்றுவர்?
பத்தொன்பதாம் நூற்றாண்டு
=========================
5) பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்த்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பினைப் பெற்றவர்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்
=========================
6) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
மருதூர் – சிதம்பரம் வட்டம் – கடலூர் மாவட்டம்
=========================
7) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த தேதி?
05.10.1823
=========================
8) வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமைய்யா & சின்னம்மை
=========================
9) இராமைய்யா சின்னம்மைக்கு இராமலிங்க அடிகளார் எத்தனையாவது மகவாக பிறந்தார்?
ஐந்தாவது மகவு
=========================
10) இறைவழிபாட்டின்போது விழியசைக்காமல் இறைவனைப் பார்த்துச் சிறித்த குழந்தை?
இராமலிங்க அடிகளார்
=========================


11) தில்லை ஆலய அந்தணர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை எவ்வாறு பாராட்டினார்?
இறையருள் பெற்ற திருக்குழந்தை
=========================
12) இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறியவர்?
வள்ளலார்
=========================
13) அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த – என்று பாடியவர்?
வள்ளலார்
=========================
14) இராமலிங்கர் பிறந்து எத்தனையாவது மாதத்தில் தன் தந்தையார் மறைந்தார்?
பிறந்த ஆறாவது திங்களில்
=========================
15) இராமலிங்கருக்கு ஐந்து வயதானவுடன், கல்வி கற்க அவரை தம் அண்ணன் யாரிடம் அனுப்பிவைத்தார்?
சபாபதி ஆசிரியர்
=========================
16) இராமலிங்க அடிகளார் எத்தனை வயதில் பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்?
ஒன்பது வயதில்
=========================
17) திருவொற்றியூர்ச் சன்னதி வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்?
திகம்பர சாமியார்
=========================
18) தெருவில் செல்லும் மனிதர்களை “அதோ ஆடு போகிகிறது, அதோ மாடு போகிகிறது, அதோ நரி போகிறது” என்று அவரவர்களின் குணத் தன்மைகளுக்கேற்ப விலங்குகளின் பெயர்களால் கூறியவர்?
திகம்பர சாமியார்
=========================
19) இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் என்று திகம்பர சாமியார் யாரை கூறினார்?
வள்ளலார் இராமலிங்க அடிகளார்
=========================
20) தருமமிகு சென்னையில் உள்ளா கந்தகோட்டத்து இறைவனை வணங்கி மனமுருகப் பாடியவர்?
இராமலிங்க அடிகளார்

read more... & download pdf 

Ayakudi Current Affairs 2018 
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)