Q1: சான்றிதழ் சரிபார்ப்பு என்பது என்ன?
A1: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் செல்லும் அடுத்த கட்ட நகர்வே சான்றிதழ் சரிபார்ப்பு ஆகும். அதாவது, விண்ணப்பதாரர்கள் தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து மூலச் சான்றிதழ்களையும் சரியாக முறைப்படி வைத்து உள்ளார்களா என்று உறுதி செய்வதே சான்றிதழ் சரிபார்ப்பு.
Q2: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எவ்வாறு போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள்?
A2: முன்னர் மொத்த காலியிடங்களில் ஒரு காலியிடத்திற்கு இரண்டு பேர் (அதாவது 1:2 விகிதம்) என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டனர், பின்னர் 1: 1.5 அல்லது சமீபத்தில் 1: 1.2 என்ற அளவில் கூட அழைக்கப்படுகிறார்கள். இந்த குரூப் 2A தேர்வில் 1:3 என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
Q3: சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலே அவர்களுக்கு வேலை நிச்சயம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
A3: அப்படி சொல்ல முடியாது. நிர்ணயிக்கப்பட்ட காலியிடங்களுக்குத் தேவையான போட்டியாளர்களை விட அதிகமான அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்படுவதால் சான்றிதழ் சரிபார்ப்பிற்குச் சென்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று சொல்ல முடியாது. அவர்களில் சிலருக்கு அடுத்தகட்ட கலந்தாய்வில் கூட அழைப்பு இல்லாமல் போகலாம்.