சூரியக்குடும்பம் - கோள்கள் பற்றி...

சூரியன்

சூரியனும் ஒரு விண்மீனே. இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன். இது ஒரு நெருப்புக்கோளம். எனவே, இதன் அருகில் செல்லவே முடியாது. இது பூமியைப் போலப் பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது.

புதன்

இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே இது மிகவும் வெப்பமாக இருக்கும். அடுப்பின்றிச் சட்டியின்றி இதன் மேற்பரப்பில் தோசையே சுடலாம். புதனின் நிறம் பழுப்பு. இது சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 நாள்கள் ஆகின்றன.

வெள்ளி

சூரியனிலிருந்து இரண்டாவது கோள் வெள்ளி. இது மிகவும் வெப்பமான கோள். இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இது. இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம். சூரியனை ஒருமுறை சுற்றிவர வெள்ளிக்கு 7.5 மாதங்களாகின்றன.

பூமி

சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள்தான் நமது பூமி. இது ஒரு பாறைக்கோளம். பூமியைக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. காற்றும் நீரும் உள்ளதால் உயிரினங்கள் இங்கு வாழ முடிகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 1/4 ஆகின்றன.

செவ்வாய்

செவ்வாய் நான்காவது கோளாகும். இதைச் சிவப்புக் கோள் என்றும் அழைப்பர். செவ்வாயின் ஒருநாள் என்பது 24.5 மணி நேரம்  செவ்வாயில் உயிரினங்கள் இருக்கக்கூடும் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. செவ்வாய் 23 மாதங்களில் சூரியனைச்சுற்றி வருகிறது.

வியாழன்

ஐந்தாவது கோள்தான் வியாழன். இதுவே கோள்களில் மிகப்பெரியது. வியாழன் பூமியைப் போல 1300 மடங்கு பெரியது. வியாழன் வாயுக்களால் ஆனது. வியாழனில் ஒரு பெரிய சிவப்புப் பகுதி உள்ளது. மெல்லிய மங்கலான வளையம் ஒன்று வியாழனைச் சூழ்ந்துள்ளது. இவ்வளையம் பனிக்கட்டி மற்றும் தூசுகளால் ஆனது. வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர 12 ஆண்டுகளாகின்றது.

சனி

சனி ஆறாவது கோள். இது இரண்டாவது பெரியகோள். வியாழனைப் போன்று சனியும் வாயுக்களால் ஆனது. சனியைச் சுற்றித் தட்டையான வட்ட வடிவமான மிகப்பெரிய வளையங்கள் உள்ளன. இவற்றை வைத்தே சனியை அடையாளம் காண இயலும்.
இந்தப் பெரிய சனிக் கோளைத் தண்ணீரில் போட்டால் மிதக்குமாம்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏனெனில் சனியில் உள்ள வாயுக்கள் நீரைவிட இலேசானவை. சனியின் நிறம் மஞ்சள். சூரியனை ஒருமுறை சுறறிவர 29.5 ஆண்டுகள் ஆகின்றன.

யுரேனஸ்

ஏழாவது கோள் யுரேனஸ். இதுவும் வியாழன் சனியைப் போன்று வாயுக்களால் ஆனதே. இதனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. யுரேனஸ், சூரியனை ஒருமுறை சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகின்றன.

நெப்டியூன்

நெப்டியூன் எட்டாவது கோளாகும். இது மிகவும் குளிர்ச்சியானது. இதைத் தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது நீலம் கலந்த பச்சை நிறத்தில் தெரியும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 ஆண்டுகளாகும்.

புளூட்டோ

ஒன்பதாவது கோளான புளூட்டோ தான் கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோள்களிலேயே மிகச் சிறியது புளூட்டோதான். புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றிவர 248 ஆண்டுகள் ஆகின்றன.

தற்போது, இது ஒரு கோள் அல்ல என்றும், கோளுக்கான தகுதி இதற்கு இல்லை என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

2 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற