இந்திய அரசியலமைப்பு


இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது.

  தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார்.

 டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.

  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. 

  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.

  இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும்.

 பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன.

 இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை: 395 சரத்துகள், 8 பட்டியல்கள்.

 தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 444 சரத்துகள், 12 பட்டியல்கள்.

  இந்திய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.

  இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும் ஒன்றாகக் கொண்டுள்ள ஓர் அரசியலமைப்பாக விளங்குகிறது.

  மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன.

 அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன.

  நெருக்கடிகாலச் சமயங்களில் அதிகாரங்களை மத்திய அரசே, ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றையாட்சிக் கூறுகள் உள்ளன. 


  இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக விளங்குகிறது. அரசு மதத் தலையீட்டிலிருந்து விடுபட்டது. எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை, வழிபாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

 இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை).

 அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன.

 அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன.

  இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (அங்கங்கள் 36 முதல் 51 வரை).

  நமது நாட்டில் பொது நல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டி வருகின்றன.

 நமது அரசியலமைப்பு, சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன.

 ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப் புனராய்வு என்று பெயர்.

  அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.

 இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது.

 பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். 



 

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற