நவம்பர் 2011 முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு


* சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். (நவம்பர் 2)

* தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்டாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று பிரதமர் அலுவலகம் அறிவித்தது. (நவம்பர் 3)

* தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 100 ஏக்கரில் ரூ. 85 கோடி மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். (நவம்பர் 4)

* அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகளுக்கான சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்தது. (நவம்பர் 4)

* பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றாவிட்டால் 5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்துப் பிரசாரம் செய்வேன் என்று மவுன விரதத்தைக் கலைத்த அன்னா ஹசாரே அறிவித்தார். (நவம்பர் 4)
-->
* நாடு முழுவதும் முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாத 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அந்தஸ்தை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு குழு பரிந்துரை செய்தது. (நவம்பர் 6)

* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற 2011-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த 22 வயது பட்டதாரிப் பெண் இவியான் சர்கோஸ் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (நவம்பர் 7)

* தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) 17-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலத்தீவு தலைநகர் மாலேவுக்குச் சென்ற பிரதமர் மன்மோகன்சிங்கை அந்நாட்டு ஜனாதிபதி முகமது நஷீத் வரவேற்றார். (நவம்பர் 9)

* மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை உடனடியாகத் தூக்கில் போட வேண்டும் என்று மாலத்தீவில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கூறினார். (நவம்பர் 10)

* தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கே.வி. தங்கபாலுவின் ராஜினாமா ஏற்கப்பட்டு, புதிய தலைவராக ஞானதேசிகன் எம்.பி.யை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார். (நவம்பர் 11)

* தமிழகத்தில் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர் களைப் பணி நீக்கம் செய்ய சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்தது. (நவம்பர் 11)

* மத்திய அரசுப் பணிக்கு வருகிற மார்ச் மாதத்துக்குள் மேலும் 25 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பணியாளர் தேர்வாணையத் தலைவர் என்.கே. ரகுபதி கூறினார். (நவம்பர் 12)

காசோலைகள், கேட்பு வரைவோலைகள் செல்லுபடியாகும் காலத்தை மூன்று மாதங்களாக பாரத ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. (நவம்பர் 6)

* கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. இதையடுத்து, இணையப் பயன்பாட்டில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. (நவம்பர் 8)

* முகமது அலியை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமைக்குரிய பிரபல முன்னாள் அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் ஜோ பிராய்சர் புற்றுநோயால் மரணம் அடைந்தார். (நவம்பர் 8)

* டெல்லியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 15 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார். (நவம்பர் 8)

* இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் கிடைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. (நவம்பர் 15)
-->
* அணுகுண்டுகளை 3 ஆயிரம் கி.மீ. தூரம் சுமந்துசென்று தாக்கும் அக்னி-4 ஏவுகணை ஒரிசாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. (நவம்பர் 15)

* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதில் நாட்டுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது உண்மையே என்றும், ரூ. 2 ஆயிரத்து 645 கோடி இழப்பு என்பது சரியல்ல என்றும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் மீண்டும் உறுதியாகத் தெரிவித்தார். (நவம்பர் 15)

* உத்தரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாகப் பிரிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வரப் போவதாக முதல்-மந்திரி மாயாவதி அறிவித்தார். (நவம்பர் 15)

* தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 4 நாள் பயணமாக இந்தோனேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். (நவம்பர் 17)

* தொலைத்தொடர்புத் துறை ஊழல் வழக்கில் 86 வயதான, முன்னாள் மத்திய மந்திரி சுக்ராமுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தீர்ப்பைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். (நவம்பர் 19)

* பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- பாகிஸ்தானின் அய்சம் அல் குரேஷி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. (நவம்பர் 14)

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற