# இந்திய வரலாறு - முக்கிய போர்கள்




1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.326

கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.

2. செலியூகசுக்கு எதிராக போர்

செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது. சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார்.


3. கலிங்கப்போர் கி.மு.261


அசோகர் கலிங்க நாட்டின்மீது கி.மு.261-ஆம் ஆண்டு படையெடுத்தார். இதனால் கலிங்கப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக் கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்டு மனம் வருந்திய அசோகர் இனி போர் செய்வதில்லை என சூளுரைத்தார்.


4. முதல் அரேபியர் படையெடுப்பு கி.பி.711-713


முகம்மது பின் காசிம், படையெடுத்து சிந்து, மூல்டான் பகுதிகளைக் கைப்பற்றினார்.


5. தானேசர் போர் கி.பி. 1014


முகமது கஜினி தானேசர் மன்னர் அனந்த பாலை தோற்கடித்தார். பல கோயில்களை அழித்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றார்.


6. மூல்டான் மீது படையெடுப்பு கி.பி.1175


முகமது கோரி மூல்டான்மீது படையெடுத்து மூல்டான் கோட்டையை கைப்பற்றினார்.


7. முதலாவது தரேயின் போர் கி.பி.1191


அஜ்மீர் மன்னராகிய பிரித்விராஜ் சௌஹா னுக்கும் முகமது கோரிக்கும் இடையே முதலாவது தரேயின் போர் கி.பி.1191ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரித்விராஜ் சௌஹான் முகமது கோரியை தோற்கடித்தார்.


8. இரண்டாம் தரேயின் போர் கி.பி.1192


முகமது கோரி பிரித்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். டெல்லி, கனோஜ் நகரங்களை கைப்பற்றினார்.


9. செங்கிஸ்கான் படையெடுப்பு


செங்கிஸ்கான் என்ற மங்கோலியர் படையெடுத்தார்.


10. தைமூர் படையெடுப்பு


தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து டெல்லியை சூறையாடினார்.


10 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற