ஒட்டக்கூத்தர்

  • இயற்பெயர் கூத்தர்
  • சைவமரபினர்; செங்குந்தர்
  • 12 ஆம் நூற்றாண்டு
  • ஊர் திருச்சி மாவட்டம் மலரி (இன்றைய திருவரம்பூர்)
  • மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக இருந்தவர்
    1. விக்கிரமசோழன் (ஆட்சி 1120-1136)
    2. இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150)
    3. இரண்டாம் ராஜராஜன் (ஆட்சி 1150-1163)
  • இரு சோழ மன்னர்களுக்கு ஆசிரியராக விளங்கியவர்
    1. இரண்டாம் குலோத்துங்கன்
    2. இரண்டாம் இராஜராஜன்
  • இயற்றிய நூல்கள்
    ஈட்டி எழுபது - செங்குந்தர் மரபின் சிறப்பைப் பேசுவது
    நாலாயிரக் கோவை - புதுவை வள்ளல் காங்கேயன்பற்றியது
    மூவர் உலா - விக்கரமன், குலோத்துங்கன், ராசராசன் பற்றியது
    குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் - தமிழின் முதல் பிள்ளைத்தமிழ்
    தக்கயாகபரணி-இதன் வேறுபெயர் வீரபத்திர பரணி
    அரும்பைத் தொள்ளாயிரம் - விக்கிரம சோழனின் தளபதி, கூத்தன் காளிங்கராயன் பற்றியது.
    கண்டன் அலங்காரம், கண்டன் கோவை - இராசராசன்மேல் பாடப்பட்டவை
    எதிர் நூல் - இவர் செய்த இலக்கண நூல், கிடைக்கவில்லை
    தில்லை உலா
    உத்தரகாண்டம்
    எழுப்பெழுபது (70 - பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும்)
  • உலா பாடியதால் குலோத்துங்கன் இவருக்குக் கொடுத்த ஊர் கூத்தனூர்
  • கூத்தனூரில் அரிசில் ஆற்றங்கரையில் கலைமகளுக்குக் கோயில் கட்டியவர்
  • கலைமகளுக்கெனத் தனித்கோயில் இது மட்டுமே ஆகும்
  • கம்பன், புகழேந்தி ஒளவையார் காலத்தவர் என்பர்
  • புகழேந்தியிடம் பகை கொண்டவர் என்றும் கூறுவர்
  • காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல்.
சிறப்புகள்
  • கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன், காளக்கவி ஆகிய பட்டங்களைப் பெற்றவர்
  • கௌடப் புலவர் - உலகியல் கடந்த வருணனை
  • சர்வஞ்ஞகவி - அனைத்தும் அறிந்த புலவர்
  • ஊழுக்குக் கூத்தன் - வாக்கு (சொல்) பலிப்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார்
  • கம்பர் கூழுக்குப் பாடியவர்; கூத்தர் மன்னனுக்குப் பாடியவர்  என்பர்.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற