- புதுக்கவிதைக்கு - பாரதியார்
- சமுதாயப் புரட்சிக்கு - பாரதிதாசன்
- பொதுவுடைமைக்கு - திரு.வி.க
- தனித்தமிழுக்கு - மறைமலையடிகள்
- பேச்சுக்கலைக்கு - அறிஞர் அண்ணா
- சிறுகதைக்கு - புதுமைப்பித்தன்
வீரமாமுனிவர் (1680 - 1747)
- இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
- இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’
- இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.
- ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.
- தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.
- பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.
- தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
- தமிழில் முதன்முதலாகச் ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை வெளியிட்டார்.
- கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைப் படைத்தார்.
- தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்.
- ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலைப் படைத்தார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
- கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களை இயற்றினார்.
- பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
- “தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது.
தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது.
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என
ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.
குணங்குடி மஸ்தான் (1788-1835)
- “மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்.
- இவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிறு
read more & download pdf
read more & download pdf file
புதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள்
TNPSC Group-2 Exam Mock Test Papers
9th New Tamil Book Study Material Pdf Download
No comments :
Post a Comment