* புதிய பாடத்திட்டம் 2018 ஆறாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்பத்தமிழ் பாடத்தின் பாடக்குறிப்புகள் TNPSC, TET, POLICE, TRB, RRB, ஆகிய தேர்வுகளுக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
- பாரதிதாசன்
தமிழ் அமுதத்தைப் போலவே மிக இனிமையானது. அத்தகைய இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.
தமிழுக்கு நிலவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.
தமிழுக்கு மணம் என்றும் பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.
Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) [Total 154 Pages & 1600 Questions]
No comments :
Post a Comment