வேற்றுமை வகைகள்

பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவதற்கு அதன் ஈற்றில் (இறுதியில்) சேர்க்கும் சொற்கள் வேற்றுமை உருபுகள் எனப்படும். அவை, ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலியனவாம்.

உருபு - இது வேற்றுமையைக் காட்டும் உருவம் அல்லது அடையாளம் ஆகும். முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என்று வேற்றுமை எட்டு ஆகும். முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனவும், எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை எனவும் பெயர் பெறும்.

எடுத்துக்காட்டு
1) முல்லை மலர்ந்தது

2) அவள் முல்லையைச் சூடினாள்

3) முல்லையால் மணம் பெற்றாள்

4) முல்லைக்கு நீர் ஊற்று

5) முல்லையின் எடுத்த இதழ்

6) முல்லையினது நறுமணம்

7) முல்லைக்கண் வண்டுகள் மொய்த்தன

8) முல்லையே!  நீ மாலையில் மலர்கிறாய்!

மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் முல்லை என்னும் பெயர்ப்பொருள் எட்டுவகையாக வேற்றுமை அடைந்திருக்கிறது.

விளக்கம் 

1. முல்லை மலர்ந்தது முதல் வேற்றுமை; எழுவாய்ப் பொருள்
2. முல்லையை இரண்டாம் வேற்றுமை; ஐ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு, செயப்படுபொருள்.
3. முல்லையால் மூன்றாம் வேற்றுமை; ஆல் : மூன்றாம் வேற்றுமை உருபு, கருவிப்பொருள்.
4. முல்லைக்கு நான்காம் வேற்றுமை; கு : நான்காம் வேற்றுமை உருபு, கோடல்பொருள். (கொள்ளுதல்)
5. முல்லையின் ஐந்தாம் வேற்றுமை; இன் : ஐந்தாம் வேற்றுமை உருபு, நீங்கல் பொருள்.
6. முல்லையினது ஆறாம் வேற்றுமை; அது : ஆறாம்
வேற்றுமை உருபு, கிழமைப்பொருள். (உடைமைப்பொருள்)
7. முல்லைக்கண் ஏழாம் வேற்றுமை; கண் : ஏழாம்
வேற்றுமை உருபு, இடப்பொருள்.
8. முல்லையே ! எட்டாம் வேற்றுமை; விளிப்பொருள். (அழைப்பு)
 
 இந்த எடுத்துக்காட்டுகளில் முதல் வேற்றுமைக்கும்,  எட்டாம் வேற்றுமைக்கும் வேற்றுமை உருபுகள் இல்லை. மற்றவற்றில் அவ்வுருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து பெயர்ப்பொருளை வேறுபடுத்தின.

இத்தொடர்களில் மூன்று உறுப்புகள் உள்ளன.

1) வேற்றுமையை ஏற்ற பெயர்
2) வேற்றுமை உருபு
3) பயனிலை

இம் மூன்றின் துணை கொண்டே வேற்றுமையை அறிதல் வேண்டும்.
முந்தைய பக்கம் செல்ல             அடுத்த பக்கம் செல்ல
-->

வேற்றுமை உருபுகள்

ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது  வேற்றுமை எனப்படும் என்று பார்த்தோம்.

பொருளை வேறுபடுத்திக் காட்டத் துணை செய்யும் உறுப்புக்கு வேற்றுமை உருபு என்று பெயர். இவ்வாறு வேறுபடுத்துவதால்தான் ஒரு வாக்கியத்தின் பொருள் நமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.

TNTET Model Question Paper I and Paper II - Online Mock Test


7ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 
வினா விடைகள்

1. பெருஞ்சோறு அளித்தல் என்பது?
(A) உணவுப்போட்டியில் அளிக்கப்படும் உணவு
(B) போருக்கு முன் அரசன் அளிக்கும் உணவு
(C) உண்ணாமல் மீதம் வைக்கும் உணவு
(D) அதிகப்பட்சம் உண்ணக்கூடிய உணவின் அளவு
See Answer:

2. நோய்க்கு மருந்து இலக்கியம் எனக் கூறியவர் யார்?
(A) வ.உ.சிதம்பரனார்
(B) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(C) திரு.வி.க.
(D) உ.வே.சாமிநாதர்
See Answer:

TET, TRB, TNPSC Tamil Online Practice Test

சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 
வினா விடைகள்

1. அறவுரைக்கோவை என வழங்கப்படும் நூல் எது?
(A) திருக்குறள்
(B) முதுமொழிக்காஞ்சி
(C) திருக்கோவை
(D) நாலடியார்
See Answer:

2. கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் அமைந்த சொல்?
(A) இயற்சொல்
(B) திரிசொல்
(C) திசைச்சொல்
(D) வடச்சொல்
See Answer:

TET TAMIL ONLINE TEST (7th Std SAMACHEER KALVI)

7ம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 
வினா விடைகள்

1.திரு.வி.க. என்பதன் விரிவாக்கம் என்ன?
(A) திருவாரூர் விருதாசலனார் மகன் கலியாணசுந்தரனார்
(B) திருவாரூர் விருதாசலனார் மகன் கந்தசாமி
(C) திரு. விருதாசலனார் மகன் கலியாணசுந்தரனார்
(D) திருவேலங்காடு விருதாசலனார் மகன் கலியாணசுந்தரனார்
See Answer:

2. முதற்பாவலர் என அழைக்கப்படுபவர் யார்?
(A) மு.வரதராசனார்
(B) அகத்தியர்
(C) கம்பர்
(D) திருவள்ளுவர்
See Answer:

சிவில் சர்வீஸ் தேர்விற்கு படிக்க வேண்டிய சில புத்தகங்கள்


சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத எண்ணுகிறீர்களா? நீங்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள் இதோ

தொடக்க நிலையிலான தயாரிப்புகளுக்கு (In first few weeks of preparation)

1. Indian History & India Struggle for Independence by Bipin Chandra;  NCERT Books ( XI  XII )

2. Geography & Spectrum

TNPSC, TRB Economics Online Test in Tamil



1. செல்வ இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:

2.கிடைப்பருமை இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:

# சந்திராயன் - I

சந்திராயன் I நிலவுப்பயணத்திற்கான ஒரு கலன். இது நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி ஆகும். 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ISRO-ஆல் விண்ணில் ஏவப்பட்டது. 

# ஒலிம்பிக் - ஒரு கண்ணோட்டம்



ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது