வெற்றி நிச்சயம்
நண்பர்களே......
குரூப் 4, VAO, குரூப் 2A......
தற்போது
நமது கனவுகள் இந்த தேர்வினை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும்.....
ஏனெனில் போட்டிகள் அதிகம், அதற்கு ஏற்றவாறு நம்மை நாம் தயார்படுத்திக்
கொள்ள வேண்டும்.
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை நாம் சாதாரணமாக எண்ணக் கூடாது,
படிக்காமலே நான் 100 பதில் அளித்து விட்டேன். அதேபோல் இந்த தடவை எழுதினால்
இன்னும் அதிகமா எடுத்து விடுவேன் என வீண் நம்பிக்கை கொள்ள வேண்டாம்.
கடந்த 4 அல்லது 5 வருட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம்
வினாக்கள் கேட்கப் படுகிறது, என்பதை முதலில் பாருங்கள். தமிழ் பகுதியில்
நிறைய இலக்கணம் வரும், அதை மிக அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
பொதுத்தமிழ் பிரிவில் 100 வினாக்கள். எப்பாடுபட்டாவது தமிழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நன்றாக படித்து விரல் நுனியில் வைத்து இருங்கள். கடினம் என்றால் எல்லாம் கடினமே...முடியும் என்றால் எல்லாம் முடிமே....