# TNPSC Group IV Exam Tips

குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'
நன்றி : தினமலர்
டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 5451 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6 ல் தேர்வு நடக்கிறது. இதில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்விற்காக ஆவலுடன் உள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. ஆதலால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம்.

தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது.

# Jana General Model Tamil Question Paper

Group IV Exam  (06.11.2016)
Jana General Model Tamil Question Paper Pdf free download
6.11.2016 அன்று நடைபெற உள்ள குரூப் 4 தேர்வினை எதிர்கொள்ள உள்ள அனைத்து தேர்வர்களும் வாழ்த்துக்கள். தேர்வினை சிறப்பான முறையில் எதிர்கொண்டு நன்கு எழுதி அரசுப்பணியினை பெற வாழ்த்துகிறோம். பொதுத்தமிழ் மாதிரிவினாத்தாள் 6 (ஜனா வினா வங்கியில் இடம் பெறாதது) பிடிஎப் வடிவில் வழங்கியுள்ளோம். பதிவிறக்கம் செய்து நன்கு பயிற்சி செய்து பயனடைய வேண்டுகிறோம்.
https://goo.gl/znjwIK

Group 4 exam hall ticket download 2016

TNPSC Group 4 hall ticket 2016 (TNPSC hall ticket 2016) : Tamil Nadu Public Service Commission, TNPSC group 4 hall ticket 2016 download link to be activated on 26-10-2016 at tnpscexams.net. Enter your registration number  or ID and date of birth to get your TNPSC hall ticket for group 4 exam.

Aspirants need to download TNPSC hall ticket 2016 (call letter / admit card) for group 4 exam from the official website and must bring it with any ID proof on the exam day to the venue.The Tamil Nadu Public Service Commission (TNPSC) is scheduled to conduct group 4 exam on 06-11-2016.

TANGEDCO Result 2016, Field Asst, Technical Asst, Junior Asst - Results Releasing Today

TNEB TANGEDCO Result 2016: There is a good news for all those who have appeared in the TNEB TANGEDCO Exam 2016 on 19th June, 27th and 28th August 2016 for field assistant, junior assistant, technical assistant, Typist, steno-typist, Tester Chemical, Assistant Draughtsman posts and looking for TNEB Field assistant result, TNEB Junior assistant, and other posts TANGEDCO exam result 2016. Now the Tamil Nadu Electricity Board is about to release the TNEB TANGEDCO Junior Assistant Result 2016 on its official website tandegco.gov.in on 19th of October 2016. Usually, the TNEB used to declare the TNEB Result 2016 for Field assistant and technical assistant posts after one month of the successful conduction of the exam.

மதிப்பு கூட்டு வரி (VAT) என்றால் என்ன?

இந்தியாவில் ஏப்ரல் 1, 2005 முதல் மறைமுக வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த விற்பனை வரி விதிப்புகள் அனைத்தும் மதிப்பு கூட்டு வரிமுறையால் மாற்றி அமைக்கப்பட்டது. அரியானா மாநிலமே இந்தியாவில் முதன் முதலில் மதிப்பு கூட்டு வரியை நடைமுறைக்கு கொண்டுவந்த மாநிலமாகும். மதிப்பு கூட்டு வரி அறிமுகம் செய்யப்பட்ட பொழுது எதிர்ப்பு தெரிவித்த குசராத்து, உத்தரப் பிரதேசம், சத்தீசுகர், இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பின்னர் மதிப்பு கூட்டு வரியை ஏற்றுக்கொண்டன. ஜூன் 2, 2014 க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் மதிப்பு கூட்டு வரியை நடைமுறை படுத்தி விட்டன.
உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன. மாநிலத்திற்கு மாநிலம் விற்பனை வரி வேறுபடுவதால் வரி விகிதமும் மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் விற்பனை வரியே மிக முக்கிய வருவாய் ஆகும். தங்களின் வருமான தேவையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் வரிகளை நிர்ணயம் செய்து வந்தன. எனவே மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதங்கள் மாறுபட்டன. இதன் விளைவாக மாநிலத்திற்கு இடையேயான தொழில் போட்டி ஏற்பட்டன. அண்டை மாநில நுகர்வோரை கவர வரிகள் குறைத்து வசூலிக்கப்பட்டன. உதாரணமாக மோட்டார் வாகனங்களுக்கு பாண்டிச்சேரியில் விற்பனை வரி குறைவு என்பதால் தமிழகத்தை சேர்ந்த பலரும் பாண்டிச்சேரியில் வாகனம் வாங்கும் பழக்கத்தை கடைபிடித்தனர். இதனால் மறைமுகமாக தமிழக அரசின் வருவாய் பாதித்தது.

# கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.
-->
காலம் : நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

நடப்பு நிகழ்வுகள் 2016 வினா விடைகள்


1. ஐ.நாவின் தொழில் மேம்பாட்டு கழகத்தின் (UNIDO) பட்டியல்படி உற்பத்தி துறையில் இந்தியாவுக்கான இடம்?
(A) 6
(B) 7
(C) 4
(D) 5
See Answer:

2. நியூயார்க் மெர்சர் குழு 2016–ஆய்வின்படி வாழ்க்கை செலவு அதிகம் (Cost of Living) ஆகும் நகரங்களில், உலகில் முதல் இடம் பிடித்தது எது?
(A) ஹாங்காங்
(B) லண்டன்
(C) மும்பை
(D) சிங்கப்பூர்
See Answer:

இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2016

அமெரிக்க கவிதை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பாடகர் பாப் டிலனுக்கு 2016ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் 1941ஆம் ஆண்டு பிறந்த பாப் டிலன், பாடகர், ஓவியர், நாட்டுப்புற இசைக்கலைஞர் என பன்முகம் கொண்டவர்.

# Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets)

சிறப்புமிக்க மாதிரித் தேர்வு 50-ஐ கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் உள்ளடக்கம் கீழே விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 154 பக்கங்களை கொண்டு 1600 பொதுத்தமிழ் கேள்விகள் மற்றும் விடைகளை கொண்டது. இது 6-12 வரை உள்ள பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இதனை திரு.புத்தன் சாத்தூர் அவர்களுக்கு பெருமையுடன் அர்ப்பணிக்கிறோம். முகநூலில் அவருடைய பணி மகத்தானது. மலையிலிருந்து வழிந்தோடும் அருவியானது சமவெளியில் ஆறாக பாய்ந்து அனைத்தையும் வளப்படுத்தி செல்வது போல முகநூலில் அவரது பணி உள்ளது என்றால் மிகையில்லை. டார்கெட் டிஎன்பிஎஸ்சி முகநூல் குழுவின் சார்பாக அன்னாரின் பணியை போற்றுகிறோம்.

உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு 2-ஆவது இடம்

உலக நாடுகளில் நடைபெற்று வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்து "நேச்சர் இன்டெக்ஸ்' நிறுவனம் சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை அந்நிறுவனம் தில்லியில் 11.10.2016 செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது.

உலகிலேயே உயர் தரமான ஆக்கப்பூர்வ அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2016

இங்கிலாந்து அமெரிக்கரான பொருளாதார நிபுணர் ஆலிவர் ஹார்ட் மற்றும் பின்லாந்து நாட்டின் பெங்க்ட் ஹோல்ம்ஸ்டிராம் ஆகியோர் கான்ட்ராக்ட் தியரிக்காக (ஒப்பந்தம் பற்றிய கொள்கை) ஆற்றிய பணிக்காக இந்த வருடத்தின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

* உருவக அணி

உவமை அணியில் ஒரு பொருேளாடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் கூறும் போது அவை ஒப்புமை உள்ள வேறுவேறு பொருள்கள் எனவே காட்டப்படும். ஆனால் சிலபோது உவமைக்கும் அது கொண்டு விளக்கப்படும் பொருளுக்கும் இடையிலான ஒப்புமை மிக அதிகமாக உள்ளது எனக் காட்ட விரும்புகிறார். கவிஞர்.

'தாமரை போன்ற முகம்' எனக் கூறிவந்த கவிஞருக்கு, இரண்டினுக்கும் உள்ள ஒற்றுமை மிகுந்து, வேற்றுமை குறைவுஎனத் தோன்றுகிறது. காலப்போக்கில் அவை இரண்டினுக்கும் வேற்றுமை இல்லை; அவை இரண்டும் ஒன்றே என்றமனவுணர்வு தோன்றுகிறது,

முகம் ஆகிய தாமரை

என்று கூறிவிடுகிறார். இங்கு முகமே தாமரை எனப்பொருள் வருகிறது. இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து உருவக அணி தோன்றுவதை உணரலாம்.

* இராமலிங்க வள்ளலார்

கடலூர் மாவட்டம், வடலூருக்கு அருகில் உள்ள மருதூரில் ராமையா - சின்னம்மை தம்பதியருக்கு 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் ஐந்தாவது மகனாக பிறந்தவர் தான் இராமலிங்கர். சபாபதி என்பவரிடம் ஐந்து வயதில் கல்வி கற்று, ஒன்பது வயதில் பாடும் திறமையையும், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் திறமையையும் பெற்று இருந்தார். சைவராக பிறந்து திருமாலை போற்றியவர். இவர் குழந்தையாக இருந்த போது கண்களில் அசைவுகள் இல்லாமல் இறைவனை பார்த்து சிரிப்பதை கண்ட ஆலய அந்தணர் "இறையருள் பெற்ற திருக்குழந்தை" என்று பாராட்டப்பட்டவர். சாதி மற்றும் மதங்களால்  வேறுபட்டு இருந்த மக்களை அவற்றில் இருந்து விடுபட்டு வர வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

சத்திய தரும சாலை:

 சத்திய தரும சாலை எனும் பெயரில்  பசியால் வாடும் அனைவருக்கும் சாதி மதம் ஆண்  பெண் என  வேறுபாடு பார்க்காமல் பார்க்காமல் உணவு வழங்கி வந்தார். இதற்காக அன்று அவர் மூட்டீய தீ இன்று வரை அணையாமல் பசித்தோர்க்கு உணவு வழங்கி வருகிறது. பசிப்பிணியால் வாடியவர்களை கண்டு வாடியவர் தான் வள்ளலார்.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2016

ஜப்பான் நாட்டைச் யோஷிநோரி ஓஹ்சுமி-க்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.

ஸ்வீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா ஆய்வு மையம், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களைத் தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்குகிறது. அந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. இதில் 2016-ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு திங்களன்று அறிவிக்கப்பட்டது.

# TNPSC Group Exam - Economics | காசோலைகளின் வகைப்பாடு

காசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும். தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி. காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம்.
ஒரு காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கியமான தகவல்கள்:

1.   ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும். (Drawee)

2.   காசோலையில் கொடுப்பவர் அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம்பெற  வேண்டும். (Drawer)

3.   காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும். (Payee)

4.   காசோலையில் எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

5.   காசோலையில் கண்டிப்பாக தேதி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றுதான், காசோலை. காரணம், ஒவ்வொரு காசோலை பரிமாற்றமும் வங்கிகளில் பதிவு செய்யப்படுகிறது. நமக்குத் தேவைப்பட்டால் காசோலை விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.