2010 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்-1


97வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு ஜனவரி3 ஆம் நாள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்திய அறிவியல் விருதினை பேராசிரியர் காஸ்யம்புடி ராதாகிருஷ்ணன் (சி.ஆர்.ராவ்) பெற்றார்.
உலகின் உயரமான கட்டடமான துபாயி்ல் உள்ள புர்ஜ் கலிபா (828மீ) ஜனவரி 5ல் திறந்து வைக்கப்பட்டது
மாத்ருபூமி வீரேந்திரகுமார் மலையாளத்தில் எழுதி சிறபி பாலசுப்பரமணியம் தமிழில் மொழிபெயர்த்த வெள்ளிப் பனிமலையின் மீது என்ற நூல் வெளியிடப்பட்டது.
கிழக்கு டில்லியில் யமுனை கரையிலிருந்து ஆனந்த் விகார் வரை மெட்ரோ ரயில் சேவை ஜனவரி 6ல் இயக்கம் தொடங்கி்யது
டில்லியில் காமன்வெல்த் சபாநாயகர்கள் 20வது மாநாடு ஜனவரி 5ம் நாள் தொடங்கியது. இதில் பருவநிலை மாற்றம் பற்றி பேசப்பட்டது.
அண்ணல் காந்தியடிகள் நிறுவிய ஹரிஜன் சேவா சங்கம் தமிழ அரசின் உயர்கல்வித்துறைக்கு ஹரிஜன் பந்து விருதினை வழங்கியது
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வெங்கட்ராகவன் அவர்களுக்கு ஜனவரி 7ம் தேதி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் 8வது மாநாட்டை டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார்.
நாட்டின் தண்ணீர் சூழ்ந்த முதல் ஐ.டி.பார்க் அம்பாலாபுழா (அரபிக்கடல் கழிமுகப் பகுதியில்) இது 2011 ஆம் ஆண்டு செயல்பட உள்ளது.
ஐசிஎஸ்ஐஏ 2010 சர்வதேச மாநாடு சென்னை லயோலா கல்லூரியில் ஜனவரி 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.
போலியோ பாதிப்பில் நைஜீரியா முதல் இடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது என WHO அறிவிப்பு
மக்கள் வாழ்வாதாரத்தில் பிரான்ஸ் முதல் இடத்தை பிடித்தது.
அதிக வரி செலுத்தும் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர். நடிகர் அக்க்ஷயகுமார் என ராய்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மின்சார ரயிலை இயக்கும் முதல் பெண் டிரைவர் திலகவதி
2009ஆம் ஆண்டிற்கான இந்திராகாந்தி அமைதி விருதினை வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா பெற்றார்
...................................................................................
2010 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் தொடரும்
பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளவும்
...................................................................................

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற