TET & TNPSC Tamil Question Answers Part-3

 161. உலா என்பதன் பொருள் (பவனி வரல்)
162. உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
163. உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
164. பேதைப் பருவத்தின் வயது (5-7)
165. பெதும்பைப் பருவத்தின் வயது (8-11)
166. மங்கைப் பருவத்தின் வயது (12-13)
167. மடந்தைப் பருவத்தின் வயது (14-19)
168. அரிவைப் பருவத்தின் வயது (20-25)
169. தெரிவைப் பருவத்தின் வயது (26-32)
170. பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)
171. இராசராச சோழனுலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
172. கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்)
173. மூவருலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
174. ’ஒட்டம்’ என்னும் சொல்லின் பொருள் (பந்தயம்)
175. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)
176. அந்தம் என்னும் சொல்லின் பொருள் (இறுதி)
177. ஆதி என்னும் சொல்லின் பொருள் (முதல்)
178. சொற்றொடர்நிலை என்பது ____________ ஆகும். (அந்தாதி)
179. திருவேங்கடத்து அந்தாதியைப் பாடியவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)
180. ’அழகிய மணவாளதாசர்’ என அழைக்கப்படுபவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)
181. ’திவ்வியகவி’ என அழைக்கப்படக் கூடியவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)
182. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிய எட்டு நூல்களின் தொகுப்பிற்குப் பெயர் (அஷ்டப் பிரபந்தம்)
183. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ____________ அவையில் அலுவலராய்ப் பணியாற்றினார். (திருமலை நாயக்கர்)
184. கதம்பம் என்பது கலம்பகமாகத் திரிந்ததாகக் கருதியவர் ___ (உ.வே.சா)
185. கலம் என்பதன் பொருள் (பன்னிரண்டு)
186. கலம்பகத்தின் உறுப்புகள் ______________ (பதினெட்டு)
187. தகமிழில் தோன்றிய முதல் கலம்பகம் (நந்திக்கலம்பகம்)
188. மதுரைக் கலம்பகத்தைப் பாடியவர் (குமரகுருபரர்)
189. மதுரைக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் (சொக்கநாத பெருமான்)
190. பிறந்தது முதல் ஐந்தாண்டுகள் வரை பேசாது இருந்த புலவர் (குமரகுபரர்)
191. குமரகுருபரர் செய்யுட்களின் தனிச்சிறப்பு (இன்னோசை)
192. சைவத்தையும் தமிழையும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் (குமரகுபரர்)
193. ’சேரி மொழியாற் செவ்விதின் கிளந்து’ பாடப்படும் இலக்கியம் (பள்ளு)
194. ‘புலன்’ என்னும் இலக்கிய வகை ___ ஆகும். (பள்ளு)
195. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை (சிந்து)
196. முக்கூடற்பள்ளின் ஆசிரியர் (பெயர் தெரியவில்லை)
197. சைவ வைணவங்களை ஒன்றிஒணைக்கும் நூல் (முக்கூடற்பள்ளு)
198. இலக்கிய மறுமலர்ச்சி9 யாருடைய காலத்தில் இருந்து தொடங்குகிறது (பாரதியார்)
199. ‘மாலைக்கால வருணனை’ இடம்பெற்றுள்ள நூலின் பெயர் (பாஞ்சாலி சபதம்)
200. மாலைக்கால வருணனை யார் யாரிடம் கூறியது (அர்ச்சுனன் பாஞ்சாலியிடம்)
201. வடமொழியில் பாரதம் இயற்றியவர் (வியாசர்)
202. பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் (ஐந்து)
203. மாலைக்கால வருணனை பாஞ்சாலி சபதத்தில் _____________ சருக்கத்தில் அமைந்துள்ளது. (அழைப்புச் சருக்கம்)
204. ’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ எனப் பாடியவர் (பாரதியார்)
-->
205. பாரதியார் பிறந்த ஊர் (எட்டயபுரம்)
206. ‘பாரதி’ என்னும் சொல்லின் பொருள் (கலைமகள்)
207. ‘தமிழ்நாட்டில் தமிழ்ப்புலவன் ஒருவன் இல்லையென்னும் வசை நீங்க’ வந்து தோன்றியவர் (பாரதியார்)
208. பாட்டுத் திறத்தால் இந்த வையத்தைப் பாலித்திடச் செய்தவர் (பாரதியார்)
209. ‘தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்று சொன்னவர் (பாரதியார்)
210. ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ எனச் சொன்னவர் (பாரதியார்)
211. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் (பாரதியார்)
212. பாரதியார் எழுதிய உரைநடை நூல் (ஞானரதம், தராசு)
213. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ எனப் பாடியவர் (பாரதியார்)
214. ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ எனப் பாடியவர் (பாரதியார்)
215. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் (பாரதிதாசன்)
216. ‘கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்’ என்று பாடியவர் (பாரதிதாசன்)
217. வாணிதாசன் பிறந்த ஊர் (வில்லியனூர்)
218. வாணிதாசனின் இயற்பெயர் (அரங்கசாமி என்ற எத்திராசலு)
219. பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்ற கவிஞர் (வாணிதாசன்)
220. தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி வெளியிட்டவர் (வாணிதாசன்)
221. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரிடம் செவாலியர் விருது பெற்றவர் (வாணிதாசன்)
222. பாவலர்மணி, கவிஞரேறு முதலான பட்டங்கள் பெற்றவர் (வாணிதாசன்)
223. வாணிதாசன் பாடல்களில் சிறந்து விளங்குவது (இயற்கை)
224. தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் எனப் பாராட்டப்படுபவர் (வாணிதாசன்)
225. ‘காடு’ என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (எழிலோவியம்)
226. இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிரிந்தால் பொருளில்லை – எனப் பாடியவர் (சுரதா)
227. பாரதிதாசனின் தலை மாணாக்கர் (சுரதா)
228. சுரதா பிறந்த ஊர் (பழையனூர்)
229. சுரதாவின் இயற்பெயர் (இராச கோபாலன்)
230. சுரதா நூல்களுள் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல் (தேன்மழை)
231. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப் பட்டவர் (சுரதா)
232. தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதல் புலவர் (சுரதா)
233. மனிதநேயம் என்னும் பாடல் இடம் பெற்ற நூல் (நல்ல உலகம் நாளை மலரும்)
234. இமயம் எங்கள் காலடியில் என்னும் நூலின் ஆசிரியர் (ஆலந்தூர் கோ.மோகனரங்கன்)
235. தமிழக அரசின் பரிசினைப் பெற்ற ஆலந்தூர் கோ.மோகனரங்கனின் நூல் (இமயம் எங்கள் காலடியில்)
236. வேலைகளல்ல வேள்விகளே என்னும் பாடல் இடம்பெற்ற நூல் (இது எங்கள் கிழக்கு)
237. ‘இது எங்கள் கிழக்கு’ நூலின் ஆசிரியர் (தாரா பாரதி)
238. விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி என்ற நூல்களின் ஆசிரியர் (தாரா பாரதி)
239. தீக்குச்சி என்னும் பாடல் இடம்பெற்ற நூல் (சுட்டுவிரல்)
240. மரபுக்கவிதையின் வேர் பர்த்தவர், புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டவர் (அப்துல்ரகுமான்)
முன்பக்கம் செல்ல              அடுத்த பக்கம் செல்ல
பதிவிறக்கம் செய்ய
-->
9 Pages Tamil TET TNPSC Study Material 
Question & Answers Free Download

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற