தீபம் நா. பார்த்தசாரதி


நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 11932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், குறிஞ்சி மலர்.

1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.


1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். 

சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், ராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து சுந்தரக் கனவுகள் என் தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.
பயண இலக்கியம்

பயணக் கட்டுரைகளும் நா.பா. நிறைய எழுதினார். ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

விருதுகள்

சாகித்ய அகாதமி பரிசு (சமுதாய வீதி), ராஜா சர் அண்ணாமலை பரிசு (துளசி மாடம்), தமிழ்நாடு பரிசு போன்ற பல பரிசுகளும் விருதுகளும் பெற்றிருக்கிறார்.

மறைவு

நாற்பத்தைந்து வயதிற்குமேல் எம்.ஏ. படித்துத் தேறி, டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என் தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் டாக்டர் பட்டம் கிடைக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார்.
புதினங்கள்
1. ஆத்மாவின் ராகங்கள்
2. கபாடபுரம்
3. குறிஞ்சி மலர்
4. சமுதாய வீதி (சாகித்ய அகாதமி பரிசு)
5. துளசி மாடம் (ராஜா சர் அண்ணாமலை பரிசு)
6. நெஞ்சக்கனல்
7. பிறந்த மண்
8. ராணி மங்கம்மாள்
9. வஞ்சிமா நகரம்
10. பொன் விலங்கு
11. நித்திலவல்லி
12. சாயங்கால மேகங்கள்
13. நெற்றிக் கண்
14. வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
15. பாண்டிமாதேவி
16. சத்திய வெள்ளம்
17. மணிபல்லவம்
18. நிசப்த சங்கீதம்
19. அநுக்கிரகா
20.  சுலபா
21. முள்வேலிகள்
22. புதுமுகம்
23. மூலக்கனல்
24. சுந்தரக் கனவுகள்
25. மலைச் சிகரம்
26. பொய் முகங்கள்
27. பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது
28. கற்சுவர்கள்
29. நினைவின் நிழல்கள்
30. மூவரை வென்றான்
31. நீல நயனங்கள்
32. மனக் கண்
33. கோபுர தீபம்
34. அனிச்ச மலர்
35. பட்டுப் பூச்சி
36. மகாத்மாவைத் தேடி
aaaa
சிறுகதைகள்
கொத்தடிமைகள்
ராஜதந்திரிகள்
ஹைபவர் கமிட்டி
சுயமரியாதைக்கும் ஒரு விலை
ஒரு நட்சத்திரத்தின் தோல்வி!
வசதியாக ஒரு வேலை
கடைசியாக ஒரு வழிகாட்டி
ஞானச் செருக்கு
கூபே
கடைசியாக ஓர் ஆண்பிள்ளை
புகழ்த்துறவு
ஒரு வெறுப்பின் மறுபுறம்
பின்னக் கணக்கில் தகராறு
ஒரு கவியின் உள் உலகங்கள்
தமிழ் இலக்கியக் கதைகள்
ஒப்புரவு

கட்டுரை

மொழியின் வழியே

2 comments :

  1. may u give all type of joint military excerise recently

    ReplyDelete
  2. really nice information samuthaya veethi patri group 1 il one kelvi vanthathu

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற