# இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3

அட்டவணைகள்
  • அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
  • முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
  • பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
  • 1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
  • எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
  • எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
  • எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன.
  • எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள்  சேர்க்கப்பட்டன.
  • ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
  • ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசமைப்பு அட்டவணைகள் (Schedules )

  • முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
  • இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
  • மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
  • நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.
  • ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.
  • ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
  • ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
  • எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).
  • ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.
  • பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்
  • பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்).
  • பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்).
முக்கிய உறுப்புகள் (Articles)

3 comments :

  1. it is very useful to me. very thankful to tnpsc tamil.

    ReplyDelete
  2. Very useful question answer thanks

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற