தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் 1101 பணியிடங்கள்


தமிழக அரசுத் துறைகளில் ஒன்றான கால்நடை பராமரிப்புத் துறையில் தற்போது கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1101 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 725 இடங்களும், கால்நடை ஆய்வாளர் பயிற்சி பணிக்கு 294 இடங்களும், அலுவலக உதவியாளர் பணிக்கு 36 இடங்களும், கதிரியக்கர் (ரேடியோகிராபர்) பணிக்கு 24 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பணிகளுக்கு 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :


விண்ணப்பதாரர் 1-7-14-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.  அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35 வயது வரையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :


கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கதிரியக்கர், ஆய்வக உடனாள், ஆய்வுக்கூட தொழில்நுட்பர், மின்னாளர் போன்ற பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், குறிப்பிட்ட பயிற்சி அனுபவமும் தகுதியாக கோரப்பட்டு உள்ளது. கால்நடை ஆய்வாளர் பயிற்சி பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கால்நடை ஆய்வாளர் பயிற்சி (11 மாதம் பயற்சி) 
தகுதி 12 ஆம் வகுப்பு ஊதிய விகிதம்  (5200-20200+2400)
கதிரியக்கர்( ரேடியோ கிராபர் )  -  தகுதி 10 ஆம் வகுப்பு- ஊதிய விகிதம் ((5200-20200+2800)
ஆய்வக உடனாள்-  (4800-10000+1400)
ஆய்வு கூட தொழில் நுட்பர் - (5200-20200+2400)
மின்னாளர்- (5200-20200+2400)
அலுவலக உதவியாளர் - தகுதி 8 ஆம் வகுப்பு - ஊதிய விகிதம்  (4800-10000+1300)
கால்நடை பராமரிப்பு உதவியாளர் - தகுதி 8 - ஆம் வகுப்பு ஊதிய விகிதம்  (4800-10000+1400)
கட்டணம்:

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.100-க்கான டி.டி. இணைக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கையர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் கட்டண விலக்கு பெறும் உரிமைக்கான சான்று இணைக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

அலுவலக உதவியாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்ற பணிகளுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதிக மதிப்பெண் பெறுபவர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை மாவட்ட தலைநகரங்களில் உள்ள மண்டல இணைய இயக்குனர் அலுவலகம் மற்றும் கோட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக நேரங்களில் ரூ.10 செலுத்தி நேரிலோ, அஞ்சல் மூலமோ பெற்றுக் கொள்ளலாம். 15-9-15-ந் தேதி வரை விண்ணப்பம் பெற முடியும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குனர், கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவ பணிகள், மத்திய அலுவலக கட்டிடம், பகுதி-2, டி.எம்.எஸ். வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை பெரிய எழுத்துகளில் குறிப்பிட வேண்டும்.

1 comment :

  1. Thank you for your information. It is very useful to me.

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற