7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய கல்விபாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ்(Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்பதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: B/45706/CSB-2015/AWES

மொத்த காலியிடங்கள்: 7,000

பணி: PGT (Post Graduate Teacher)


தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உளவியல், உடற் கல்வியியல், கம்பியூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் முதுகலை மற்றும் பி.எட்முடித்திருக்க வேண்டும்.

பணி: TGT (Trained Graduate Teacher)

தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறையில் இளங்கலைமற்றும் பி.எட் முடித்து மத்திய, மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: PRT (Primary Teacher)

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.தேர்வு கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2015

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 23.12.2015 தேர்வு முடிவுகள் http://awesindia.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.


Official Notification: http://www.awesindia.com/CSB%202015.pdf
Online Application: http://aps-csb.in/College/Index_New.aspx

2 comments :

  1. hello,i completed ME(computer science).can i apply this exam

    ReplyDelete
  2. Very very Thank you this website very yousful materials

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற