# சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)

பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது. 

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம். இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும்.


வரிசை எண்
பேரிலக்கியம்
சிற்றிலக்கியம்
1. பாடல் எண்ணிக்கை / அடி எண்ணிக்கை அதிகம் பாடல் எண்ணிக்கை / அடி எண்ணிக்கை குறைவு.
2. அகப்பொருளிலோ புறப்பொருளிலோ பல துறைகளை உள்ளடக்கியது ஏதேனும் ஒரு துறையை மட்டும் கூறும்
3. பேரிலக்கியம் தலைவனின் முழு வாழ்க்கையையும் விளக்கிக் கூறும். சிற்றிலக்கியம் தலைவனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் கூறும்.
4. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் கூறும். ஏதேனும் ஒன்றைக் கூறும்.

சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும். சமக்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல் "கட்டப்பட்டது" எனப் பொருள்படும்.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை சிற்றிலக்கிய வகைகள் மேலோங்கி நின்றன. இக்காலத்தைச் சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கலாம். 

தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும்

1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.
3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.
4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.
5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.
6. அலங்கார பஞ்சகம் - -
7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
8. இணைமணி மாலை - -
9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.
10. இரட்டை மணிமாலை - -
11. இருபா இருபஃது - -
12. உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல்.
13. உலாமடல் - கனவில் பெண் இன்பம்.
14. உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.
15. உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை.
16. உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு.
17. ஊசல் - வாழ்த்துதல்.
18. ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.
19. ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு.
20. ஊரின்னிசை - பாட்டுடைத்தலைவன் ஊர்.
21. எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர்.
22. எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை.
23. ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள்.
24. ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா.
25. ஒலியல் அந்தாதி - -
26. கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.
27. கடைநிலை -
28. கண்படை நிலை -
29. கலம்பகம் - 18 உறுப்புகள்.
30. காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல்.
31. காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது.
32. காப்பு மாலை - தெய்வம் காத்தல்.
read more 

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற