www.tnpsctamil.inஐ subscribe செய்துள்ள தாங்கள் கீழே உள்ள subscribe buttonஐ சொடுக்கி எமது www.tnpsctamil.infoவையும் subscribe செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம். www.tnpsctamil.infoல் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கான பல முக்கிய பாட குறிப்புகள் தினமும் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
\
இந்து மத இணைப்பு விளக்கம்
1. சிற்றின்பம் என்பது எது?
உலகபொருள்கள் வழியாக மக்கள் அனுபவிக்கும் இன்பம் சிற்றின்பம் எனப்படும்.
2. பேரின்பம் என்பது என்ன?
என்றும் நிலைபெற்று நின்று இடையறாது அனுபவிக்கதக்க இன்பம் பேரின்பமாகும்.
3. மதம் என்றால் என்ன?
பேரின்பத்தை மக்கள் அனுபவிக்கப் பெரியோர்கள் இறைவன் அருளோடு வகுத்த வழியே மதமாகும்.
4. வழிபட்டு வரும் கடவுள் பெயரால் அமைந்துள்ள மதங்கள் எவை?
சைவம் , வைணவம்
5. மதங்கள் நிறுவியவர் பெயரால் உள்ள மதங்கள் எவை?
பௌத்தம், ஜைனம்
பௌத்தம், ஜைனம்
6. தலைசிறந்த நூலின் பெயரால் அமைந்த மதங்கள் எவை?
வேதாந்தம், ஸ்மார்த்தம்
7. ஆரியர்கள் சிந்துநதி தீரத்தில் வசித்து வந்தபோது அவர்களை பாரசீகரும், கிரேக்கரும் எவ்வாறு அழைத்தனர்?
சிந்துக்கள் அல்லது இந்துக்கள்
8. சிந்துக்களுடைய மதமே இந்து மதம் என ஆயிற்று என்று யார் கூறினர்?
சில சரித்திர ஆசிரியர்கள்
9. இந்திய நாட்டின் மதம் எது?
இந்து மதம்
10. இந்து மதம் என்னும் பெயர் எதனை மேற்கொண்டு வந்ததாகும்?
இந்து மதத்தின் கொள்கையை மேற்கொண்டு வந்ததாகும்.
No comments :
Post a Comment