2011 டிசம்பர் முக்கிய நிகழ்வுகள்

டிசம்பர்  25 - 31

* கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாளான டிசம்பர் 22-ம் தேதி தேசிய கணித நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற ராமானுஜத்தின் 125-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். (டிசம்பர் 26)

* கர்நாடக முன்னாள் முதல் மந்திரி பங்காரப்பா மரணம் அடைந்தார். (டிசம்பர் 26)


* பாராளுமன்றத்தில் இரவு 11 மணி வரை நடந்த விவாதத்துக்குப் பிறகு லோக்பால் மசோதா ஓட்டெடுப்பில் நிறைவேறியது. (டிசம்பர் 27)
-->

* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தேசிய பேரிடர் குழு அமைப்பதை மத்திய அரசு நிறுத்திவைத்தது. (டிசம்பர் 27)

* டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் யோஷிகிகோ நோடாவை பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றார். (டிசம்பர் 28)

* ரஷியாவில், பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை அந்நாட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்புக்கு இந்தியா மகிழ்ச்சி தெரிவித்தது. (டிசம்பர் 28)

* லோக்பால் மசோதா மீது டெல்லி மேல்-சபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. (டிசம்பர் 29)

* தமிழகத்தின் வடபகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. (டிசம்பர் 29)

* கடலூர், புதுச்சேரியைக் கடுமையாகப் பாதித்த `தானே' புயலுக்கு 33 பேர் பலியானார்கள். (டிசம்பர் 30)


* தானே புயலின் தாண்டவத்தால் கடலூர் நகரம் உள்ளிட்ட அந்த மாவட்டப் பகுதிகள் சூறையாடப்பட்டது போன்ற நிலையை அடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. (டிசம்பர் 30)

* தானே புயலின் சீற்றத்தால் புதுச்சேரி சின்னாபின்னமானது. 15 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது. (டிசம்பர் 30)

* இயற்பியல் துறையில் 2009-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இங்கிலாந்தின் உயரிய, `2012 புத்தாண்டு சாதனையாளர் விருது' வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. (டிசம்பர் 31)

வங்கிக் கணக்குகளை முடிப்பவர்களிடம் அபராதக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. (டிசம்பர் 27)

நாட்டில் தங்கம் விற்பனையில் தமிழ்நாடு, கேரளா, ஆநëதிரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்த நான்கு மாநிலங்களிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிசம்பர் 29)

2011-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் ராகுல் டிராவிட் முதலிடம் பிடித்தார். அவர் 12 டெஸ்ட்களில் 1145 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் முதலிடம் பெற்றார். அவர் 8 டெஸ்ட்களில் 50 விக்கெட்டுகளை அள்ளினார். (டிசம்பர் 30) 

2012 ஜனவரி  1 முதல் 7 ஆம் தேதி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு 
-->

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற