# ஐந்தாண்டுத் திட்டங்கள்


முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்:(1951-1956)

இந்திய அரசு, தனது முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் , உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த்துவதே முதல் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.


இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961)

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல், தொழல் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாக இருந்தன.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்(1961-1966)

முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது. மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.

நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்(1969-1974)
மக்களின் வாழ்க்கைத் தரத்தை- குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து வழங்குவதும் முதலிடத்தைப் பெற்றன. நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப் பரவலாக்குவது தலையாய பணி ஆயிற்று.

ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்(1974-1979)

உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத்தேவையாக இருந்தது.1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
மேலும் படிக்க...
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற