ஜுலை 2012 முக்கிய நிகழ்வுகள்

சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு `கெடு' விதித்த உள்துறை அமைச்சகம், அதற்குள் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. (ஜுலை 1)

இந்தியாவில் 5 மாநிலங்களில் ஆயிரத்து 600 கி.மீ. தொலைவுக்கு அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் பாரம்பரிய இட அந்தஸ்தை `யுனெஸ்கோ' வழங்கியது. (ஜுலை 2)

பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற ரகசியத்தை அவிழ்க்கும் விதமாக, `கடவுள் துகளை' கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர். (ஜுலை 4)

பனிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (2012-2017) ஏழ்மை விகிதத்தை 10 சதவீதம் குறைக்க மத்திய திட்டக் குழு இலக்கு நிர்ணயித்துள்ளது. (ஜுலை 7)

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் `டை'யில் முடிந்ததால் இரு அணிகளும் கூட்டாக கோப்பையைப் பெற்றுக் கொண்டன. (ஜுலை 1)

உக்ரைன் தலைநகர் `கீவ்'வில் ஐரோப்பிய கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 4- 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியைத் தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. (ஜுலை 2)

விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ராத்வன்ஸ்காவை தோற்கடித்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். (ஜுலை 7)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த மேயர் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றியது. காங்கிரசுக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. (ஜுலை 8)

பாண்டிய மன்னர்கள் சொத்து விவகாரத்தில், சென்னையில் உள்ள சிவகிரி ஜமீன் சொத்துகளைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர், நில நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத் துறை சிறப்பு கமிஷனர், ஆவணக் காப்பகத்தினர் ஆகியோருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. (ஜுலை 10)

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக ஜெகதீஷ் ஷெட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஜுலை 10)

மாநில முதல்-மந்திரிகள் எழுப்பிய பிரச்சினைகளைத் தீர்த்து, விரைவில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி ப. சிதம்பரம் தெரிவித்தார். (ஜுலை 10)

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக ஜெகதீஷ் ஷெட்டர் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பரத்வாஜ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஜெகதீஷ் ஷெட்டருடன் 2 துணை முதல்-மந்திரிகளும், 31 மந்திரிகளும் பதவியேற்றனர். (ஜுலை 12)

பிரபல நடிகரும், மல்யுத்த வீரருமான தாராசிங் மும்பையில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் அனுதாபம் தெரிவித்தனர். (ஜுலை 12)

ஒடிசா மாநிலம் வீலர் தீவு பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய `அக்னி-1' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்தது. 700 கிலோமீட்டர் தூர இலக்கை அது தாக்கி அழித்தது. (ஜுலை 13)

காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில், துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ஹமீது அன்சாரி தேர்ந்து எடுக்கப்பட்டார். இதை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிகாரபூர்வமாக அறிவித்தார். (ஜுலை 14)

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டது. (ஜுலை 14)

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேயைத் தோற்கடித்த சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், 7-வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அத்துடன் மீண்டும் `நம்பர் 1' இடத்துக்கும் முன்னேறினார். (ஜுலை 8)

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ அறிவித்தார். (ஜுலை 13)

கஜகஸ்தான் நாட்டின் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து, இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மேலும் 2 பேருடன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்டார். (ஜுலை 15)

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் அறிவிக்கப்பட்டார். (ஜுலை 16)

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அமீது அன்சாரி டெல்லியில் தேர்தல் அதிகாரி டி.கே. விஸ்வநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். (ஜுலை 18)

பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா மும்பையில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். (ஜுலை 18)

நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. எம்.பி.க்கள் டெல்லியிலும், எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாநிலங்களிலும் வாக்களித்தனர். (ஜுலை 19)
-->

துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் அமீது அன்சாரி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. (ஜுலை 21)

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி அபு ஜிண்டாலிடம் மும்பை குற்றப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். (ஜுலை 21)

சர்வதேசப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா, சீனா நாடுகள் உந்துசக்திகளாகத் திகழ்கின்றன என்று ஸ்டாண்டர்டு சார்ட்டடு வங்கியின் தலைமைப் பொருளியல் வல்லுனர் ஜெரால்டு லியான்ஸ் தெரிவித்தார். (ஜுலை 15)

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் பி.ஏ. சங்மாவை விட சுமார் 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார். (ஜுலை 22)

`முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிக்க தமிழக அரசை அனுமதிக்க வேண்டும்' என்று கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (ஜுலை 23)

நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றிய விடுதலைப் போராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமி செகல் கான்பூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். (ஜுலை 23)

அசாம் மாநிலத்தில் இனக் கலவரத்தில் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 4 பேர் பலியானார்கள். முதல்-மந்திரி தருண் கோகாயை போனில் அழைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இனக் கலவரத்தை ஒடுக்கி, சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். (ஜுலை 24)

நாட்டில் புலிகள் சரணாலயப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. (ஜுலை 24)

டெல்லி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்றார். அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது. (ஜுலை 25)

தாம்பரம் அருகே தனியார் பள்ளி பஸ்சில் பயணம் செய்த சிறுமி சுருதி, பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து, பஸ் சக்கரம் தலையில் ஏறி இறந்தாள். அதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை தீ வைத்து எரித்தனர். (ஜுலை 25)

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் தொண்டு நிறுவனம் நடத்திவரும் குழந்தை பிரான்சிஸுக்கு பிரசித்தி பெற்ற `மகசேசே விருது' அறிவிக்கப்பட்டது. (ஜுலை 25)

அசாம் மாநிலத்தில் தொடர்ந்த இனக் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. 3 மாவட்டங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். (ஜுலை 25)

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 30-வது ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மைதானத்தில் அணிவகுத்துச் சென்றனர்.

81 பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.

தொடக்க விழாவின் நிறைவாக, ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

;

 
trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, teacher post, Bank Jobs, test, Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal, USA JOBS, singapore, work at home, Government Jobs, USA.gov, Singapore Jobs, govt job, hair remover

1 comment :

  1. நல்ல தொகுப்பு...

    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற