தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்

அய்யன் திருவள்ளுவர் விருது
தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்திவருகிறது. அந்தவகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப் பட்டு வருகிறது.

இதுவரை திருவள்ளுவர் விருது பெற்றோர்:

*    1986 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
*    1987- கி.ஆ.பெ. விசுவநாதம்
*    1988- ச. தண்டபாணி தேசிகர்
*    1989 - வ.சு. ப. மாணிக்கம்
*    1990 - கு.ச. ஆனந்தன்
*    1991 - சுந்தர சண்முகனார்
*    1992 - நாவலர் இரா. நெடுஞ்செழியன்
*    1993 - கல்லை தே. கண்ணன்
*    1994 - திருக்குறளார் வீ. முனுசாமி
*    1995 -க. சிவகாமசுந்தரி
*    1996 - முனைவர் மு. கோவிந்தசாமி
*    1997 - பேராசிரியர் கு. மோகனராசு
*    1998 - முனைவர் இரா. சாரங்கபாணி
*    1999 - முனைவர் வா. செ. குழந்தைசாமி
*    2000 - த.சி.க. கண்ணன்
*    2001 - பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன்
*    2002 - முனைவர் இ. சுந்தரமூர்த்தி
*    2003 - முனைவர் கு. மங்கையர்க்கரசி
*    2004 - இரா. முத்துக்குமாரசாமி
*    2005 - பெரும்புலவர் ப. அரங்கசாமி
*    2006 - முனைவர் ஆறு. அழகப்பன்
*    2007 - முனைவர் . க. ப. அறவாணன்
*    2008 - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
*    2009 -முனைவர் பொற்கோ
*    2010 - ஐராவதம் மகாதேவன்
*    2011 - முனைவர் பா. வளவன் அரசு
*    2012 - புலவர் செ. வரதராசன்
*    2013 - டாக்டர் ந. முருகன் (சேயோன்)
*    2014 - கவிஞர் யூசி
* திருக்குறளார் வி. முனுசாமி இயற்கை எய்திய காரணத்தால் இவர்தம் மரபுரிமையருக்கு விருது வழங்கப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது

திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல்களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை பாவேந்தர் பாரதிதாசன் விருதை பெற்றோர்:
*    1978 - கவிஞர் சுரதா
*    1979 - எஸ்.டி. சுந்தரம், கவிஞர் வாணிதாசன்
*    1980 - கவிஞர் முத்துலிங்கம்
*    1981 - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
*    1982 - கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம்
*    1983 - கவிஞர் வகாப்
*    1984 - கவிஞர். நா. காமராசன்
*    1985 - கவிஞர் ஐ. உலகநாதன்
*    1986 - கவிஞர். மு. மேத்தா
*    1987- கவிஞர் முடியரசன்
*    1988- கவிஞர் பொன்னிவளவன்
*    1989 - கவிஞர் அப்துல் ரகுமான்
*   1990 - பாவேந்தர் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் 21 பேர் விருது பெற்றனர்.
*    1991 - பாவேந்தர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 23 பேர் விருது பெற்றனர்.
*    1992 - கவிஞர் முத்துராமலிங்கம்
*    1993 - புலவர். பெ. அ. இளஞ்செழியன்
*    1994 - கவிஞர். கரு. நாகராசன்
*    1995 -கவிஞர் மறைமலையான்
*    1996 - கவிஞர். இரா. வைரமுத்து
*    1997 - முனைவர். சரளா இராசகோபாலன்
*    1998 - முரசு நெடுமாறன் (மலேசியா)
*    1999 - சிலம்பொலி சு. செல்லப்பன்
*    2000 - பாவலர் மணிவேலன்
*    2001 - கவிஞர் மணிமொழி
*    2002 - முனைவர் ச.சு. இராமர் இளங்கோ
*    2003 - பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி
*    2004 - பேராசிரியர் லெ.ப. கரு. இராமநாதன்
*    2005 - விருது வழங்கப்படவில்லை
*    2006 - முனைவர் கா. செல்லப்பன்
*    2007 - திருச்சி எம்.எஸ். வெங்கடாசலம்
*    2008 - தமிழச்சி தங்கபாண்டியன்
*    2009 -கவிஞர் தமிழ்தாசன்
*    2010 - முனைவர் இரா. இளவரசு
*    2011 - கவிஞர். ஏர்வாடி க. இராதாகிருஷ்ணன்
*    2012 - முன்னவர் சே. நா. கந்தசாமி
*    2013 - முனைவர் இராதா செல்லப்பன்

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது

தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கும் திட்டம் 1979-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது. இத்திட்டத்தின்படி ஆண்டு தோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்கப் பட்டு வருகிறது.

இதுவரை தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பெற்றோர்:

*    1979 - ஜெகசிற்பியன்
*    1980 - நாரண துரைக்கண்ணன்
*    1981 - அ.கி. பரந்தாமனார்
*    1982 - திருக்குறளார் வீ. முனுசாமி
*    1983 - பன்மொழிப் புலவர் கா. அப்பா துரையார்
*    1984 - கோவி. மணிசேகரன்
*    1985 - டாக்டர் க.த. திருநாவுக்கரசு
*    1986 - கவிஞர். கா.மு. ஷெரிப்
*    1987- டாக்டர் நா. சுப்பு ரெட்டியார்
*    1988- மணவை முஸ்தபா
*    1989 - டாக்டர் தமிழண்ணல்
*    1990 - புலவர் கா. வேந்தன், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்
*    1991 - இராஜம் கிருஷ்ணன்
*    1992 - அ.மு. பரமசிவானந்தம்
*    1993 - முனைவர் தி.முத்துக் கண்ணப்பர்
*    1994 - புலவர் இரா. இளங்குமரன்
*    1995 - பேராசிரியர் கா.பொ. இரத்தினம்
*    1996 - பேராசிரியர் மா.நன்னன்
*    1997 - மா.சு. சம்பந்தன்
*    1998 - புலவர் மருதவாணன்
*    1999 - கவிஞர் மன்னர் மன்னன் (புதுச்சேரி)
*    2000 - பேராசிரியர் கா. சிவத்தம்பி (யாழ்ப்பாணம்)
*    2001 - முனைவர் ப. இராயன்
*    2002 - பேராசிரியர் தி.வே. கோபாலய்யர்
*    2003 - முனைவர் ம.ரா.போ. குருசாமி
*    2004 - முனைவர் ச. அகத்தியலிங்கம்
*    2005 - விருது வழங்கப்படவில்லை
*    2006 - எழுத்தாளர் க. திருநாவுக்கரசு
*    2007 - முனைவர் த. பெரியாண்டவன்
*    2008 - முனைவர் ச.பா. அருளானந்தம்
*    2009 -வெ. அண்ணாமலை (எ) இமயம்
*    2010 - பேராசிரியர் அ. அய்யாசாமி
*    2011 - முனைவர் நா. ஜெயப்பிரகாசு
*    2012 - பிரேமா நந்தகுமார்
*    2013  - ஜெ. அசோகமித்திரன்

மகாகவி பாரதியார் விருது

தேச விடுதலை, பெண் விடுதலைக்காக பாடல் இயற்றிய பாரதியார் பெயரில் பாரதியார் விருது 1979- ஆம் ஆண்டு முதல் வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. பாரதியார் படைப்புகளை ஆய்வு செய்வோர், பாரதியார் பற்றித் திறனாய்வு செய்வோர், பாரதியார் புகழை பரப்பும் வகையில் கவிதை- உரைநடை நூல் தொண்டு செய்வோர் ஆகியோர் இவ்விருதினை பெறத் தகுதி படைத்தவர்களாவர்.

இதுவரை மகாகவி பாரதியார் விருது பெற்றவர்கள்:


*    1997 - கவிஞர் மதிவண்ணன்
*    1998 - குமரி அனந்தன்
*    1999 - வலம்புரி ஜான்
*    2000 - கவிஞர் வாலி
*    2001 - பெ.சு.மணி
*    2002 - கே.வி. கிருஷ்ணன்
*    2003 - ரா.அ. பத்மநாபன்
*    2004 - சீனி. விசுவநாதன்
*    2005 - விருது வழங்கப்படவில்லை
*    2006 - தமிழருவி மணியன்
*    2007 - கவிஞர் சௌந்தர கைலாசம்
*    2008 - முனைவர் இரா. மணியன்
*    2009 - டாக்டர் சேக்கிழார் அடிப்பொடி  தி.ந. இராமச்சந்திரன்
*    2010 - நா. மம்மது
*    2011 - முனைவர் இரா பிரேமா
*    2012 - கு. இராமமூர்த்தி
*    2013 - கு. ஞானசம்பந்தன்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது


தமிழ்நாடு அரசு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2000- ஆம் ஆண்டில் தோற்றுவித்தது. இவ்விருது ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

இதுவரை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள்:
*    2000 - கோ. முத்துப்பிள்ளை
*    2001 - முனைவர் கா. காளிமுத்து
*    2002 - முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
*    2003 - முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
*    2004 - முனைவர் பு.பா. இராஜராஜேஸ்வரி
*    2005 - விருது வழங்கப்படவில்லை
*    2006 - விருது வழங்கப்படவில்லை
*    2007 - கவிஞர் கா. வேழவேந்தன்
*    2008 - பேராசிரியர் த. பழமலய்
*    2009 - தாயம்மாள் அறவாணன்
*    2010 - முனைவர் இரா. மதிவாணன்
*    2011 - முனைவர் இரா. மோகன்

தந்தை பெரியார் விருது

தமிழக மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகளை அகற்றவும், சாதி ஒழிக்க, பெண் அடிமைத்தனத்தை எதிர்க்க, திராவிட இனத்தை மேம்படுத்த பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவர் தமிழர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி. இவர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துகளை பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை தந்தை பெரியார் விருதை பெற்றவர்கள்:
*    1999 - நன்னிலம் நடராஜன்
*    2000 - திருச்சி என். செல்வேந்திரன்
*    2001 - புலமைப்பித்தன்
*    2002 - ஜெகவீரபாண்டியன்
*    2003 - துரைகோவிந்தராஜன்
*    2004 - பி.வேணுகோபால்
*    2005 - இரா. செழியன்
*    2006 - நடிகர் சத்யராஜ்
*    2007 - கவிதைப்பித்தன்
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - நக்கீரன் கோபால்
*    2010 - சாமிதுரை
*    2011 - டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன்
*    2012 - டாக்டர் கோ. சமரசம்
*    2013 - சுலோச்சனா சம்பத்

பேரறிஞர் அண்ணா விருது
பேரறிஞர் அண்ணா பகுத்தறிவு, திராவிட கருத்துகளை தனது எழுத்தாற்றல், பேச்சு, நாடக படைப்புகள் போன்றவற்றால் பரப்பியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகத்தை 1949-இல் துவக்கி, 1967- 1969 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர். இவரது பெயரால் பேரறிஞர் அண்ணா விருது என தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இதுவரை பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர்கள்:
*    2006 - ஆர். எம். வீரப்பன்
*    2007 - சாரதா நம்பி ஆரூரான்
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - முனைவர் அவ்வை நடராஜன்
*    2010 - கோ. ரவிக்குமார்
*    2011 - இரா.  செழியன்
*    2012 - கே.ஆர். பி. மணிமொழியான்
*    2013 - பண்ருட்டி ச. இராமச்சந்திரன்

அண்ணல் அம்பேத்கர் விருது

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர், நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், தீண்டாமை ஒழிய போராடியவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக போராடியவர் பாபாசாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சமூக நீதிக்காக பாடுபடும் சான்றோர் ஒருவருக்கு இவரது பெயரில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்கள்:
*    2006 - தொல். திருமாவளவன்
*    2007 - ஆர். நல்லக்கண்ணு
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
*    2010 - யசோதா
*    2011 - சு. காளியப்பன்
*    2012 - தா. பாண்டியன்
*    2013 - பேராயர் எம். பிரகாஷ்

பெருந்தலைவர் காமராஜர் விருது

தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து, மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தி, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். பெருந்தலைவர், கிங்மேக்கர் என புகழப்பட்ட இவரது பெயரில் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை பெருந்தலைவர் காமராசர் விருதுபெற்றோர்:


*    2006 - திருநாவுக்கரசு
*    2007 - மாரிமுத்து
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - விருதுநகர் இரா. சொக்கர்
*    2010 - ஜெயந்தி நடராசன்
*    2011 - திண்டிவனம் ராமமூர்த்தி
*    2012 - சிங்கார வடிவேல்
*    2013 - கி. அய்யாறு வாண்டையார்
Click and download pdf file

1 comment :

  1. நல்ல பதிவு,தொடருங்கள்......

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற