நாயன்மார்களின் வரலாறு

- திருநாவுக்கரசரை வழிபட்டவர் அப்பூதியடிகள்
- சுந்தரரை வழிபட்டவர்கள் சோமாசி மாற நாயனார். பெருமிழலைக் குறும்ப நாயனார்
- திருஞானசம்பந்தரை வழிபட்டவர் கணநாத நாயனார்
- புல் நெய்யால் விளக்கு எரித்தவர் கணம்புல்ல நாயனார் (தலைமயிர் எரித்தவர்)
- நீரால் விளக்கு எரித்தவர் கணம்புல்ல நாயனார்
- தம் ரத்தத்தால் விளக்கு எரிக்க முயன்றவர் கலிய நாயனார்
- வீட்டுக் கூரையைப் பிரித்து எரித்து வயலில் விதைக்கப்பட்ட விதைநெல்லால் உணவு ஆக்கி அடியவர்க்குக் கொடுத்தவர் இளையான்குடி நாயனார்
- ஐந்தெழுத்தைப் புல்லாங்குழலில் வாசித்தபடி மேல் உலகம் சென்றவர் ஆனாய நாயனார்
- சிவனைத் தூது அனுப்பிய சுந்தரரை இகழ்ந்து பின் நட்புக் கொண்டவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார்

- முற்பிறவியில் சிலந்தியாக இருந்து இப்பிறவியில் 70 கோயில்களைக் கட்டியவர் கோச்செங்கண் சோழ நாயனார்
- மனத்தில்கோயில் கட்டியவர் பூசலார் நாயனார்
- மனத்தால் ஞானபூசை செய்தவர் வாயிலார் நாயனார்
- கல்லால் அடித்துச் சிவனை வழிபட்டவர் சாக்கிய நாயனார்
- முழங்கையால் சந்தனம் அரைத்தவர் மூர்த்திநாயனார்
- வஞ்சித்துத் தன்னைக் கொன்ற அடியவரைக் காத்தவர் மெய்ப்பொருள் நாயனார்
- தம் கணவரைச் சைவராக்கியவர் மங்கையர்க்கரசியார்
- திருநாளைப் போவார் எனப்படுவார் நந்தனார்

- கழறிற்றிவார் எனப்படுவார் சேரமான் பெருமாள் நாயனார்
- மாணியார் எனப்படுவார் மங்கையர்க்கரசியார்
- பகைவன் நெற்றியில் திருநீறு கண்டு போரிடாமல் அவன் தன்னைக் கொல்லும்படி நடந்து கொண்டவர் ஏனாதி நாயனார்
- சிவநிவேதனப் பொருளைக் கீழே சிந்தியதற்காகத் தம் கழுத்தைத் தாமே அரிந்தவர் அரிவாட்ட நாயனார்
- வேலையாள் சிவனடியாராக வந்தபோது அவரை வணங்காத தம் மனைவியை வெட்டியவர் கலிக்கம்ப நாயனார்
- அர்ச்சனைக்கான பூவை மோந்த மனைவியின் மூக்கைச் சிவனடியார் அறுக்க அதுபோதாது என்று கையையும் வெட்டியவர் கழற்சிங்க நாயனார்
- மனைவியைத் தீண்டாது வாழ்ந்தவர் திருநீலகண்ட நாயனார்
- மனைவியின் தாலியை விற்றுக் குங்குமம் வாங்கியவர் குங்குலியக் கலய நாயனார்
- சிவனடியார்க்குத் தம் மனைவியைத் தானமாகக் கொடுத்தவர் இயற்பகை நாயனார்
- பாற்குடத்தை இடறிய தம் தந்தையின் காலை வெட்டியவர் சண்டேசுவர நாயனார்
- பிள்ளைக்கறி சமைத்தவர் சிறுத்தொண்டர் நாயனார்

3 comments :

  1. Not in use. Kindly update syllabus related notes.

    ReplyDelete
  2. P.Mekala: very useful to us.But downloading option not their in this site.We want downloading option also

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற