இக்காலக் கவிதைகள் - TNPSC Group 4 & VAO Study Material


இருபதாம் நூற்றாண்டில் அறிவியலும் இலக்கியமும் விரைவாக வளர்ந்தன.
தமிழ்மொழியில் செய்யுள், உரைநடை என்னும் இரு வடிவிலும் புதுவகை இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் உரைநடைவளத்தைக் கருத்திற்கொண்டு நோக்கும்போது இக்காலத்தை உரைநடைக் காலம் எனலாம்.

மரபுக்கவிதை
பாரதியின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன. மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச்சாரும். மக்கள் மேம்பாட்டை அடியொற்றியே அவர்தம் கவிதைகள் அமைந்தன.

இந்திய ஒருமைப்பாட்டின் உயர்வினை விளக்கும் அவர்தம் கவிதை அடிகள் வருமாறு :

முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.
தமிழ் வளர்ச்சிக்கு வழிசொல்லும் மற்றொரு கவிதை:
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.

தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்விடுதலை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியனவற்றைப் பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

எனத் தமிழர் எழுச்சிபெற விழையும் பாரதிதாசன்,

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம்நோக்கி நடக்கின்ற திந்தவையம்
இல்லானும் அங்கில்லை பிறர்நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே
எனப் பொதுவுடைமையை விரும்பி வரவேற்கிறார்.

கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில் ஆழ்த்துவன; உணர்ச்சிகொள்ள வைப்பன.
கவிமணியின் பாடல்வரிகள் சில
கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின்
சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ
மங்கை யராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா
சாலைகளில் பலதொழில்கள் பெருக வேண்டும்
சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும்

 
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

நாமக்கல் கவிஞர் கவிதைகளில் காந்தியச் சிந்தனைகள் மிளிர்கின்றன.
இவர், தமிழரின் சிறப்பையும் தமிழ்மொழியின் இனிமையையும் சேர்த்துப் பாடினார்.
நாமக்கல் கவிஞர் பாடிய சில பாடல்வரிகள்
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்.
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.
முடியரசன்
ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற
தீங்குடைய மனப்போக்கர் வாழும்நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி

சுரதா
சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம். அதனால், அவர் உவமைக் கவிஞர் என்னும் சிறப்பைப் பெற்றார்.

ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன  - வல்லிக்கண்ணன்
Read more                                                  Click and download pdf file

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற