பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்-2

படித்ததில் பிடித்தது: எக்சாம் மாஸ்டரில் இருந்து

"கொட்டிக் கிடக்கும் அற்புத வாய்ப்புகளை பயன்டுத்துங்கள்
வெற்றி நிச்சயம்". குறுக்கு வழிகள் எல்லாம் நேர்வழிகளை விட நீளமானவை". "வெற்றிக்கும் வெறிக்கும் ஒரு சின்ன ஒற்று மட்டுமே வேறுபாடு என்பதைச் சற்று உற்று நோக்கினால் உணர்ந்து கொள்ளலாம்" - இறையன்பு ஐ.ஏ.எஸ்

இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் செறிவான பதில்கள்:

‪#‎கேள்வி‬: தங்களின் இறை நம்பிக்கை!


‪#‎இறையன்பு‬ ஐ.ஏ.எஸ் அவர்களின் பதில்: எனக்கும் இறை நம்பிக்கை உண்டு. இறைக்கும் என் மீது நம்பிக்கை உண்டு.

#கேள்வி: தாங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து ஐெயித்தது எப்படி?

‪#‎பதில்‬: முன்னேற்றமடைந்தாகவோ ஜெயித்ததாகவோ நான் கருதவில்லை. காரணம் நான் களத்தில் எந்தப் போட்டியிலும் இல்லை. யாரோடும் பந்தயத்தில் இல்லை.

#கேள்வி: நீங்கள் இது வரை நிறைய எழுதியிருக்கிறீர்கள். அவற்றில் எது உங்களுக்கு பிடித்தது?

#பதில்: முற்றிலுமாகப் பிடித்ததை இது வரை எழுதவில்லை. அதை நோக்கிய முயற்சிகளே இது வரை எழுதியவை. வயிறு நிறைந்தவன் இடத்தைக் காலி செய்வதைப்போல எனக்குப் பிடித்த நூலை எழுதியவுடன் எழுதுவதை நிறுத்தி விடுவேன்.

#கேள்வி: தாங்கள் நினைத்த உயர்ந்த இலக்கை அடைந்து விட்டீர்களா?


#பதில்: எனக்கு என்று ஒரு நோக்கம் இருக்கிறதே தவிர இலக்கு எதுவுமில்லை என்னுடைய நோக்கத்தை அடைய தினமும் என்னால் முடிந்த அளவு உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

#கேள்வி: உங்களுடைய பள்ளிப் பருவம் பற்றி?


#பதில்: என்னுடைய பள்ளிப்பருவம் மகிழ்ச்சிகரமாக இருந்தது. படிப்பு சுமையாக இல்லாமல் சுகமாக இருந்தது. முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்கிற வெறியோ மற்றவர்களை முந்தித் தள்ள வேண்டும் என்ற பொறாமையோ இல்லாமல் பள்ளிக்குச் செல்வோம். ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்றால் பதக்கம் கிடைத்ததைப் போல மகிழ்ச்சி அடைந்தோம். நுகர்வதற்கு அதிக வசதிகள் இல்லாவிட்டாலும், பகிர்வதற்கு நிறைய அனுபங்கள் இருந்தன. இன்று நினைத்தாலும் சிறகு முளைக்கும் வசந்த காலங்கள் அவை.

#கேள்வி: இளைஞர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?


#பதில்: அற்புதமான வாய்ப்புகள் உங்கள் முன்னால்கொட்டிக் கிடக்கின்றன கவனத்தை சிதற விடாமல் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் எல்லாம் எங்களுடைய இளமையை சரி வர பயன்படுத்திக் கொள்ளாமல் போய் விட்டோம். முழுமையாக எழுதி முடிக்காத நோட்டுப் புத்தகமாக அதைத் தூக்கி போட்டு விட்டோம். நீங்களாவது ஒவ்வொரு பக்கத்தையும் முழுமையாகப் பயன்படுத்துங்கள். அது கவிதையாக இருக்கலாம், கணிதமாக இருக்கலாம், அறிவியலாக இருக்கலாம், கலையாக இருக்கலாம். இளமையில் கிடைக்கும் துணிவு என்ற முரட்டுக் குதிரையை தூய்மை என்ற கடிவாளத்தால் அடக்கி முறையாக சவாரி செய்யுங்கள். முழுமையை அடையுங்கள்.

தொகுத்து வழங்கியவர் : தம்பு சொக்கலிங்கம்
  

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற