2012 April - Current Affairs


* பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய வர்த்தகத் துறை மந்திரி ஆனந்த் சர்மா தெரிவித்தார். (மார்ச் 11)


* பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்றினார். அப்போது, கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. நேர்மையான, ஊழலற்ற அரசை அளிப்போம் என்று அவர் தெரிவித்தார். ஜனாதிபதி உரையின்போது, இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். (மார்ச் 12)

* உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக விஜய் பகுகுணா பதவி ஏற்றார். விழாவை ஹரிஷ் ராவத் கோஷ்டியினர் புறக்கணித்தனர். (மார்ச் 13)

* கேரள கடலில் படகு மீது கப்பல் மோதி 5 பேர் பலியான வழக்கில், கப்பல் கேப்டன் சார்லஸ் பெரீரா சென்னையில் கைது செய்யப்பட்டார். (மார்ச் 13)

* 2012-2013-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்துக்கு 13 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டன. (மார்ச் 14)
-->
* மணிப்பூர் மாநில முதல்-மந்திரியாக ஓ. இபோபிசிங் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் குர்பச்சன் ஜகத் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். (மார்ச் 14)

* பஞ்சாப் மாநிலத்தில் 5-வது முறையாக பிரகாஷ்சிங் பாதல் முதல்-மந்திரியாகப் பதவி ஏற்றார். (மார்ச் 14)

* விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொன்ற காட்சியை இங்கிலாந்தின் `சேனல்-4' தொலைக்காட்சி வெளியிட்டது. (மார்ச் 15)

* 47 மந்திரிகளுடன் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக 38 வயது அகிலேஷ் யாதவ் பதவி ஏற்றார். (மார்ச் 15)

* 2012- 2013-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் ரூ. 46 ஆயிரம் கோடிக்கு வரி உயர்வு அறிவிக்கப்பட்டது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது. (மார்ச் 16)
-->
* தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பி.எச். அரவிந்த் பாண்டியன் நியமிக்கப்பட்டார். (மார்ச் 16)

* மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான வரி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நகைக் கடைகள் அடைக்கப்பட்டன. தமிழகத்தில் 20 ஆயிரம் நகைக் கடைகள் அடைக்கப்பட்டன. (மார்ச் 17)

* வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் தனது 100-வது சதத்தை எட்டி புதிய சரித்திரம் படைத்தார்.
-->

Previous                                                           Next

trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, teacher post, Bank Jobs, test, Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal, USA JOBS, singapore, work at home, Government Jobs, USA.gov, Singapore Jobs, govt job, hair remover

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற