எச்சம் (பெயரெச்சம், வினையெச்சம்)

எச்சம்

பெயரெச்சம்

1.  பெயரைக் கொண்டு முடியும் எச்சம், பெயரெச்சம்.
2.  பெயரெச்சம் கால வகையால் மூன்று வகைப்படும்.
o    இறந்தகாலப் பெயரெச்சம் - படித்த மாணவன்
o    நிகழ்காலப் பெயரெச்சம் - படிக்கின்ற மாணவன்
o    எதிர்காலப் பெயரெச்சம் - படிக்கும் மாணவன்
*  இது தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.

தெரிநிலை பெயரெச்சம் :

*  காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும்.

*  பெயரெச்ச வாய்ப்பாடுகள் செய்த, செய்கின்ற, செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் வரும். இவை பால்காட்டும் விகுதியுடன் செய்பவன் முதலிய ஆறும் எஞ்சி நிற்கும்.
*  இவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.
(எ.கா.,) உண்ட அருண்


செய்பவன்    -   அருண்
கருவி    -   தட்டு 
நிலம்    -   வீடு
செயல்    -   உண்ணுதல்
காலம்    -   இறந்த காலம்
செய்பொருள்    -   சோறு.


*    இதே போல் உண்கின்ற அருண், உண்ணும் அருண் என்னும் பெயரெச்சங்களுடன் பொருத்திக் காணலாம். மேலும், உடன்பாடு - எதிர்மறை என்பதையும் அறியலாம்.
(எ.கா.,)
உடன்பாடு  - உண்ட அருண்,
எதிர்மறை  - உண்ணாத அருண்
குறிப்பு பெயரெச்சம் :
          காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
          எ.கா:
* நல்ல மாணவன்
* அழகிய மலர்
நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும்.

வினையெச்சம்

Ø  வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம்.
Ø  இது கால வகையால் மூன்று வகைப்படும்.
o    இறந்தகால வினையெச்சம் - ஓடி வந்தான்
o    நிகழ்கால வினையெச்சம் - ஓடி வருகின்றான்
o    எதிர்கால வினையெச்சம் - ஓடி வருவான்
குறிப்பு : இவை ‘உ’கர, ‘இ’கர, மற்றும் ‘ய’கர இறுதியுடன் ஒரு எச்சச்சொல்லில் நிற்கும்.
வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என இருவகைப்படும்.
தெரிநிலை வினையெச்சம் :
காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்
    (எ.கா) படித்துத் தேறினான்


குறிப்பு வினையெச்சம் :
*  காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும்
   (எ.கா) மெல்ல நடந்தான்
முற்றெச்சம் :
* ஒரு வினைமுற்று, வேறொரு வினைமுற்றைக் கொண்டுமுடியும் பொழுது எச்சப்பொருள்தரும். இது ‘முற்றெச்சம்’ எனப்படும்.
    (எ.கா) கற்றனன் மகிழ்ந்தான் - (கற்று மகிழ்ந்தான்)

8 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற