தூது என்ற சிற்றிலக்கிய வகையைப் பற்றிய பொதுக் கருத்துகளையும் தூது இலக்கியத்தின் இலக்கணத்தையும், தூது இலக்கியத்தின் தோற்றத்தையும் இங்குக் காண்போம்
இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குச் செய்திகளை அல்லது கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உறுதுணையாய் இருப்பவரைத் தூதர் என்று வழங்குவர். காதலர்களிடையே தூது அனுப்பும் பழக்கம் உண்டு. அரசர்களிடையே தூது அனுப்பும் மரபும் உண்டு. இன்றும் அரசுகளுக்கு இடையே கருத்துப் பரிமாற்றங்களுக்காகத் தூதர்கள் நியமிக்கப்படுகின்றனர். நாடுகள் தோறும் பிறநாட்டுத் தூதரகங்கள் உள்ளன. தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் தூது பற்றி இலக்கியங்களும் படைக்கப்பட்டன.
தூது பற்றிய இலக்கியங்கள் பிற்காலத்திலேயே தோன்றின. அவை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டன..
தூதின் இலக்கணம்
தூது இலக்கிய வகையின் இலக்கணத்தைப் பின்வரும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன:
இலக்கண விளக்கம் (874)
பிரபந்த மரபியல் (15)
சிதம்பரப் பாட்டியல், மரபியல் (10)
நவநீதப் பாட்டியல், செய்யுளியல் (20)
முத்து வீரியம், யாப்பு அதிகாரம், ஒழிபியல் (151)
தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் நெஞ்சு விடு தூது எனும் நூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார். அவர் தமது நெஞ்சத்தைத் தம் ஆசிரியருக்குத் தூதாக அனுப்புகிறார். இதில் சைவ சித்தாந்தக் கருத்துகள் நிரம்ப உள்ளன. இந்த நூலின் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு.
thank u
ReplyDelete