current affairs 2012 Pdf - Part 4 சமீபகால நிகழ்வுகள் -4

நவம்பர்

6. ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ விருது சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது


9. சுவிட்சர்லாந்து வங்கியில் கருப்புப்பணம் பதுக்கிய இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

13. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

15. அயர்லாந்தில் வசித்து வந்த டாக்டர் சவீதாவின் வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டது. அதை கருக்கலைப்பு செய்ய அந்நாட்டு சட்டம் இடம் கொடுக்காததால், மரணமடைந்தார்.

17. சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம்.

21. மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.

24. மத்திய அரசால் வழங்கப்படும் மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பும் திட்டம் ஜனவரி 1-முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது.

25. இந்தியாவில் நடைபெற்ற பார்முலா1 கார் பந்தயத்தில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார்.

24. அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சிக்கு ‘ஆம் ஆத்மி’ என்று பெயரிட்டார்.

30. தமிழக சட்டசபையின் வைர விழா நடைபெற்றது.

30. முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மரணம்.
 
டிசம்பர்

4. பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களை அனைத்து விதமான பணிகளிலும் வேலைக்கமர்த்துவதை தடை செய்யும் மசோதா தாக்கல் ஆனது.

4. இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்தது.

5. சில்லறை வர்த்தகம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது.

10. உலக ஸ்குவாஷ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை தீபா பல்லிகல் பெற்றார்.

12. பாரத ரத்னா விருது பெற்ற சிதார் இசை மேதை பண்டிட் ரவிசங்கர் அமெரிக்காவில் மரணம்.

13. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 920 கோடி முதலீட்டில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

16. தில்லியில், ஓடும் பேருந்தில் பிசியோதெரபி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். இதனையடுத்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

21. உலகம் (டிசம்பர் 21, 2012) இன்றைய தினம் அழிந்து விடும் என்ற மாயன் காலண்டரின் கணிப்பு பொய்யானது.

23. சச்சின் தெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சினிமா

59-வது தேசிய விருது வழங்கும் விழாவில் தமிழில் ‘வாகை சூட வா’ சிறந்த படமாகவும், சிறந்த பொழுது போக்குப் படமாக ‘அழகர்சாமியின் குதிரை’யும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அப்புக்குட்டி சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார். தியாகராஜன் குமாரராஜா சிறந்த அறிமுக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.

ஒலிம்பிக்

லண்டனில் (ஜூலை 27 - ஆகஸ்ட் 12) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வழக்கம்போல பதக்கப்பட்டியலில் அமெரிக்கா (104 பதக்கங்களுடன்) முதலிடத்தை பிடித்தது. 2 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்களோடு பதக்கப்பட்டியலில் 55-வது இடத்தைப் பிடித்தது இந்தியா. இப்போட்டியில் 204 நாடுகள் கலந்து கொண்டன.

பிரபலங்கள் - 2012

பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி (வயது 76) ஜூலை 25 அன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன் மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். 40 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வரலாறு, அரசியல் அறிவியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டங்களும், சட்டத்தில் பட்டமும் பெற்று பத்திரிகையாளராக வாழ்க்கையை துவக்கியவர் பிரணாப்.

அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற சமாஜ்வாதிக் கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் முதல்வர் பொறுப்பை ஏற்காமல் தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார். அகிலேஷ் யாதவ் (வயது 39) ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

நரேந்திர மோடி

குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நான்காவது முறையாக அம்மாநில முதல்வர் பதவியில் அமர்ந்தார். நடுத்தர வர்க்கத்தில் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே அரசியலில் தீவிரம் காட்டினார். இவர் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
 
அர்விந்த் கெஜ்ரிவால்

அன்னா ஹசாரே குழுவில் இருந்த இவர், அக்குழுவிலிருந்து பிரிந்து வந்து ‘ஆம் ஆத்மி’ என்ற பெயரில் புதுக்கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி உள்ளிட்டோர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த தகவல்களையும் வெளியிட்டவர் இவர்.

ராகுல் திராவிட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மார்ச் 9-ஆம் தேதி அன்று ராகுல் திராவிட் (வயது 39) அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட திராவிட் 1996-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். 12 ஒரு நாள் சதத்தையும், 36 டெஸ்ட் சதத்தையும் எடுத்துள்ளார் ராகுல் திராவிட்.

சச்சின் தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கர் (வயது 39) சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டிசம்பர் 23 அன்று அறிவித்தார். இதுவரை மொத்தம் 463 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18,426 ரன்களைக் குவித்துள்ளார். இவற்றில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த பெருமை இவரையே சேரும்.

சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவழி பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவில் பணியாற்றி வருகிறார். இவர் 7-வது முறையாக விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 44 மணி நேரத்தில், தொடர்ந்து 6 முறை நடைப்பயணம் செய்த விண்வெளி வீராங்கனை என்ற புதிய சாதனையை சுனிதா படைத்துள்ளார்.

சிறுமி மலாலா

பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கூடாது என்று தாலீபான் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து குரல் கொடுத்த மலாலா தீவிரவாதி ஒருவனால் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி சுடப்பட்டாள். உயிருக்குப் போராடிய மலாலாவை லண்டனுக்கு வரவழைத்து அந்நாட்டு அரசு சிகிச்சை அளித்து காப்பாற்றியது. துணிச்சல் மிக்க இச்சிறுமியை கௌரவிக்கும் விதத்தில் நவம்பர் 10-ம் தேதி ‘மலாலா தினம்’- ஆக கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.


முந்தை பக்கம் செல்ல

பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
-->

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற