10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான
வினா விடைகள்
1. தொடர்நிலைத்தொடர் என்பது
(I) ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது
(II) அதனால், ஆகையால், ஏனெனில் முதலிய இணைப்புச் சொற்களைப் பெற்று வருவது
(III) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலைகளைக் கொண்டு முடிவது
(IV) ஒரு தனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத்தொடர்களுடன் வருவது
(A) I மற்றும் III மட்டும் சரி
(B) I, IV மட்டும் சரி
(C) II, III தவறு
(D) I, II மட்டும் சரி
See Answer:
2. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” எனக்கூறியவர்
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) நாக்கல் கவிஞர்
See Answer:
3. “மொழிப்பற்று இலாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது” எனக்கூறியவர்
(A) நேரு
(B) காந்திஜி
(C) பெரியார்
(D) திலகர்
See Answer:
4. கோவலன் கொலையுண்ட செய்தியை யார் மூலம் கண்ணகி அறிந்தாள்?
(A) அறவணஅடிகள்
(B) கவுந்தியடிகள்
(C) மாதரி
(D) ஊர் மக்கள்
See Answer:
5. பொருள் தருக, - தாருகன்
(A) தருமம் செய்பவன்
(B) அரக்கன்
(C) செல்வந்தன்
(D) தேவர்
See Answer:
6. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” எனக்கூறியவர்
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) நாக்கல் கவிஞர்
See Answer:
7. இலக்கணக்குறிப்பு தருக, - மடக்கொடி
(A) பண்புத்தொகை
(B) உருவகம்
(C) அன்மொழித்தொகை
(D) வினைத்தொகை
See Answer:
8. பட்டியல் I உள்ள சொற்றொடரை பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு,
பட்டியல் I பட்டியல் II
(a) கருவி 1. உண்ணுதல்
(b) நிலம் 2. சோறு
(c) செயல் 3. கலம்
(d) செய்பொருள் 4. வீடு
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 3 4 1 2
(C) 3 1 4 2
(D) 3 2 1 4
See Answer:
9. பொருள் தருக, “ஆயகாலை”
(A) 64 கலைகள்
(B) விடியற்காலை
(C) நல்ல நேரம்
(D) அந்த நேரத்தில்
See Answer:
10. பொருந்தாச்சொல்லை கண்டறிக
(A) தனிமொழி
(B) தொடர்மொழி
(C) பொதுமொழி
(D) செம்மொழி
See Answer: