மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக இருந்தவர் 1. விக்கிரமசோழன் (ஆட்சி 1120-1136) 2. இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150) 3. இரண்டாம் ராஜராஜன் (ஆட்சி 1150-1163)
இரு சோழ மன்னர்களுக்கு ஆசிரியராக விளங்கியவர் 1. இரண்டாம் குலோத்துங்கன் 2. இரண்டாம் இராஜராஜன்
இயற்றிய நூல்கள் ஈட்டி எழுபது - செங்குந்தர் மரபின் சிறப்பைப் பேசுவது நாலாயிரக் கோவை - புதுவை வள்ளல் காங்கேயன்பற்றியது மூவர் உலா - விக்கரமன், குலோத்துங்கன், ராசராசன் பற்றியது குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் - தமிழின் முதல் பிள்ளைத்தமிழ் தக்கயாகபரணி-இதன் வேறுபெயர் வீரபத்திர பரணி அரும்பைத் தொள்ளாயிரம் - விக்கிரம சோழனின் தளபதி, கூத்தன் காளிங்கராயன் பற்றியது. கண்டன் அலங்காரம், கண்டன் கோவை - இராசராசன்மேல் பாடப்பட்டவை எதிர் நூல் - இவர் செய்த இலக்கண நூல், கிடைக்கவில்லை தில்லை உலா உத்தரகாண்டம் எழுப்பெழுபது (70 - பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும்)
உலா பாடியதால் குலோத்துங்கன் இவருக்குக் கொடுத்த ஊர் கூத்தனூர்
கூத்தனூரில் அரிசில் ஆற்றங்கரையில் கலைமகளுக்குக் கோயில் கட்டியவர்
கலைமகளுக்கெனத் தனித்கோயில் இது மட்டுமே ஆகும்
கம்பன், புகழேந்தி ஒளவையார் காலத்தவர் என்பர்
புகழேந்தியிடம் பகை கொண்டவர் என்றும் கூறுவர்
காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல்.
சிறப்புகள்
கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன், காளக்கவி ஆகிய பட்டங்களைப் பெற்றவர்
கௌடப் புலவர் - உலகியல் கடந்த வருணனை
சர்வஞ்ஞகவி - அனைத்தும் அறிந்த புலவர்
ஊழுக்குக் கூத்தன் - வாக்கு (சொல்) பலிப்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார்
கம்பர் கூழுக்குப் பாடியவர்; கூத்தர் மன்னனுக்குப் பாடியவர் என்பர்.
No comments :
Post a Comment