TNPSC GROUP 4 GENERAL TAMIL - GENERAL ENGLISH - GENERAL STUDIES SYLLABUS

TNPSC - டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - பொதுத் தமிழ் - புதிய பாடத்திட்டம்
(கொள்குறிவகைத் தேர்விற்கு) - எஸ்.எஸ்.எல்.சி. தரம்
பகுதி - (அ) இலக்கணம்

1. பொருத்துதல்
(i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
(ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

2. தொடரும் தொடர்பும் அறிதல்
(i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
(ii) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

3. பிரித்தெழுதுக

4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்


6. பிழை திருத்தம்

(i) சந்திப்பிழையை நீக்குதல்
(ii) ஒருமை பன்மை -பிழைகளை நீக்குதல்
(iii) மரபுப் பிழைகள். வழுவுச் சொற்களை நீக்குதல்
(iv) பிறமொழிச் சொற்களை நீக்குதல்

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்

10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

11. வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று. வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்

12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்

15. இலக்கணக் குறிப்பறிதல்

16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்

பகுதி - (ஆ) இலக்கியம்

1. திருக்குறள் தொடர்பான செய்திகள். மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)

அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஓப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.

2. அறநூல்கள்

நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3. கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்

4. புறநானூறு, அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை. எட்டுத்தொகை. பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

5. சிலப்பதிகாரம், மணிமேகலை, தொடர்பான செய்திகள், மேற்கோள்கள். சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும், ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

6. பெரியபுராணம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், திருவிளையாடற் புராணம், தேம்பாவணி, சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

7. சிற்றிலக்கியங்கள்

திருக்குற்றாலக்குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8. மனோன்மணியம், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)

9. நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர். குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை. உமறுப்புலவர் தொடர்பான செய்திகள். மேற்கோள்கள். சிறப்புப் பெயர்கள்.

பகுதி -இ 
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

2. மரபுக்கவிதை - முடியரசன். வாணிதாசன். சுரதா. கண்ணதாசன். உடுமலைநாராயணகவி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மருதகாசி தொடர்பான செய்திகள். அடைமொழிபெயர்கள்.

3. புதுக் கவிதை, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு. நேரு, காந்தி, மு.வ., அண்ணா, ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
5. நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்

6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் - பொருத்துதல்

7. கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்

8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

9. உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.

10. உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்

11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி. பாவலரேறு பெருஞ் சித்திரனார். தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

12. ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

13. பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர் - சமுதாயத் தொண்டு

14. தமிழகம் - ஊரும் பேரும். தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்

15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்

16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

17. தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார், மூவலு}ர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி, விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை. ராணி மங்கம்மாள்)

18. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்

19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்

20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.


4 comments :

  1. Thank you admim TNPSC syllabus very useful
    Upload more tnpsc study materials.

    ReplyDelete
  2. thank you sir. tnpsctamil website very useful website. i want more tnpsc general tamil part b & part c study materials and model question paper.
    thank you sir

    ReplyDelete
  3. this website is no.1 tnpsc website. very useful study notes.

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற