TNPSC, TET, TRB Exam Science Study Material - வகைப்பாட்டியல்

TNPSC, TET, TRB, Police, RRB, Postal Exams
Samacheer Kalvi 9th Science Book Study Material
வகைப்பாட்டியல்

உயிரினத்தொகுப்புகளிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைப் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தும் பாடப்பிரிவை (taxonomy) டாக்ஸானமி என்று அழைப்பார்கள்.

இச்சொல்லில் வரும் ‘டாக்ஸிஸ்’ (taxis) என்ற கிரேக்க வார்த்தைக்கு வரிசைப்படுத்துதல் என்றும்,‘நோமியா’ (nomia) என்ற வார்த்தைக்கு முறை என்றும் பொருள்

வகைப்பாட்டியல் என்பது உயிரியலின் ஒரு பிரிவு ஆகும். வகைப்பாட்டியலில் உயிரினங்களை இனங்கண்டறிதல், விவரித்தல், பெயரிடுதல், வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சுவீடன் நாட்டைச் சார்ந்த தாவரவியல் அறிஞர் கரோலஸ் லின்னேயஸ் (கி.பி.1707-1778) வகைப்பாட்டியலின் பல்வேறு படிநிலைகளை உருவாக்கினார்.

வகைப்பாட்டியலின் படிநிலைகள்
உயிரினங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளின் அடிப்படைகளில் அவற்றை வரிசைப்படுத்த உதவுகிறது.

லின்னேயஸ் தனது புத்தகமான சிஸ்டெமா நேச்சுரே (Systema Naturae) என்ற புத்தகத்தில், அவர் கண்டறிந்த உயிரினங்களைப் பல குழுக்களாகப் பிரித்து வரிசைப்படுத்தினார்.

உயிரினங்களைப் பெயரிடுவதற்கும், வகைப்படுத்துவதற்கும், ஒப்பீடு செய்வதற்கும் லின்னேயஸ் வகைப்பாட்டியல் முறையையே தற்போது பயன்படுத்துகிறோம்.

வகைப்பாட்டியலின் மிகப்பெரிய படிநிலை உலகமாகும். அதன்கீழ் பல துணை அலகுகள் பல்வேறு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

விலங்குகளை அவற்றின் ஒத்த தன்மை மற்றும் வேறுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் முதன் முதலில் வகைப்படுத்தியவர் அரிஸ்டாட்டில். (கி. மு. 384-322 )

அரிஸ்டாட்டில் விலங்கியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

கரோலஸ் லின்னேயஸ் என்னும் ஸ்வீடன் நாட்டுத் தாவரவியல் அறிஞர் தற்கால வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். (கி. பி.1707-1778)
வகைப்பாட்டியலின் பல்வேறு படிநிலைகள்
உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம் மற்றும் சிற்றினம் ஆகும்.
வகைப்படுத்துதலில் கீழ்நிலை அலகு சிற்றினமாகும்.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற