கால்நடை பராமரிப்புத்துறைத் தேர்விற்கான பாடக்குறிப்புகள்

கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த தகவல்கள்:
 
மத்திய அமைச்சரவையைப் பொருத்தவரை கால்நடை பராமரிப்புத்துறை விவசாயத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் அமைச்சர் ராதா மோகன் சிங்.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. கே. எம். சின்னைய்யா
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளர்ச்சிக்கழகம் அமைச்சர் திரு.கே.ஏ. ஜெயபால்

தமிழ்நாடு பால்வளத்துறை மற்றும் பால்பண்னைத்துறை அமைச்சர் திரு.பி.வி.ரமணா.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் டாக்டர் ள்.விஜயகுமார்.

பால்வளத்துறை நலிவடைந்த, பொருளாதாரத்தில் பின் தங்கிய விவசாய பெருமக்களுக்கு வாழ்வாதாரத்தைத் தரக்கூடிய துறையாக மட்டுமல்லாமல் மக்களுக்கு சரிவிகித சத்துணவான பாலை உற்பத்தி செய்யும் துறையாகவும் உள்ளது.


பால்உற்பத்தியில் பற்றாக்குறை நாடாக இருந்த இந்தியா தற்சமயம் தன்னிறைவடைந்து உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது பெருமைக்குரியதாகும்.

பால் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
2012-2013 ஆண்டில் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி நாளொன்றுக்கு 1.82 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 25 சரக துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கால்நடையின் விபரங்கள்:
வீட்டில் வளர்க்கக்கூடிய ஆடு, மாடு, கோழி, வாத்து, குதிரை, எருமை, கழுதை, ஒட்டகம், பன்றி போன்ற விலங்குகள் கால்நடைகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.

ஆடு:
உயிரியல் வகைபாடு:
 
தொகுதி    :    முதுகுநாணுள்ளவை
வகுப்பு    :    பாலூட்டி
வரிசை     :    அர்ட்டியோடாக்டியாலா
குடும்பம்    :    போவிடே
துணைக்குடும்பம்    : கேப்ரினே
பேரினம் : கேபரா
இனம்     :    கேப்ரா ஏகாக்ரஸ்
சிற்றினம்    :    C.a.ஹிர்கஸ்

ஆடு என்ற வளர்ப்புப் பிராணியின் முச்சொற்பெயர் : கேப்ரா ஏகாக்ரஸ் ஹிர்கஸ்

ஆடு ஒரு தாவர உண்ணிப் பாலூட்டி விலங்கு ஆகும்.

தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.

அனடோலியாவிலுள்ள சக்ரோஸ் மலைத்தொடர்தான் ஆடுகளின் பூர்வீகம் என்று மரபணு சோதனைகள் நமக்கு காட்டுகின்றன.

பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன.

தமிழ் நாட்டில் பல ஆடுகளின் இனங்கள் உள்ளன. அவை கொடி ஆடு, கன்னி ஆடு, பள்ளை ஆடு என்பன.

வெள்ளாடு:
 
ஆட்டினத்தில் வெள்ளாடு என்ற தனிவகை வெள்ளை நிறத்திலும் கறுப்பு நிறத்திலும் காணப்படும்.

வெள்ளாடு தழைகளை மேயும், குரும்பாடு புல்லை மேயும்.

துரு, துருவை என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மயிரடர்ந்த காட்டாடும் வீட்டு விலங்காக வளர்க்கப்படுகிறது.

வெள்ளாட்டை கயிற்றில் கட்டிக்கொண்டு மேய்ப்பர்.

குரும்பாடும் செம்மறியாடும் மந்தை மந்தையாக மேய்க்கப்படும்.

பலவகையான இலை தழைகளை மேய்வதால் வெள்ளாட்டுப்பால் மருத்துவக்குணம் உள்ளது.

வெள்ளாட்டுப்பால் குடற்புண்ணை ஆற்றும்.

மகாத்மா காந்தி வெள்ளாட்டுப்பாலை விரும்பி உண்டு வந்தார்.



No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற