உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு 2-ஆவது இடம்

உலக நாடுகளில் நடைபெற்று வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்து "நேச்சர் இன்டெக்ஸ்' நிறுவனம் சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை அந்நிறுவனம் தில்லியில் 11.10.2016 செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது.

உலகிலேயே உயர் தரமான ஆக்கப்பூர்வ அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது.

உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் சிறந்த அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் முதல் 100 நிறுவனங்களில், இந்தியாவைச் சேர்ந்த 5 கல்வி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி (சிஎஸ்ஐஆர்), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்), டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்), இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிலையம் (ஐஐடி) ஆகிய ஆராய்ச்சி நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதில், சீனாவின் 40 ஆராய்ச்சி நிலையங்களும், அமெரிக்காவின் 11 ஆராய்ச்சி நிலையங்களும், பிரிட்டனின் 9 கல்வி நிலையங்களும், ஜெர்மனியின் 8 கல்வி நிலையங்களும் அடங்கும்.

இந்தியாவிலிருந்து குறைந்த அளவிலான கல்வி நிலையங்களே இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், அவற்றின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புக்காகவே இந்தியாவுக்கு 2-ஆவது இடம் கிடைத்துள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற