# TNPSC Group IV Exam Tips

குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'
நன்றி : தினமலர்
டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 5451 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6 ல் தேர்வு நடக்கிறது. இதில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்விற்காக ஆவலுடன் உள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. ஆதலால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம்.

தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது.


கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:
பொது அறிவு பகுதி
புதிய தேர்வு முறையில் 25 வினாக்கள் ஆப்டிடியூட் பகுதியில் கேட்கப்படுகிறது. இதில் எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், அடிப்படை கணித முறை, கையாளும் முறை, பின்னங்கள், தனிவட்டி, கூட்டுவட்டி பரப்பளவு மற்றும் கனஅளவு பகுதிகளில் உள்ள சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.

விபரங்களை கையாளும் முறையில் பட்டை விளக்கப்படம், வட்ட விளக்கப்படம், கோட்டு விளக்கப்படம், அட்டவணைகள் தொடர்பான வினாக்கள்.

பகடை, புதிர், வினாக்கள், எண் தொடர் வரிசை, விடுபட்ட எண், விடுபட்ட படம், படத்தொடரில் அடுத்து இடம் பெறும் படம். 

தொடர்ந்து படிக்க...






No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற